‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க
வேண்டியவை’’ எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில், அம்பாறை
தெயட கிருளவை பகிஸ்கரித்தல், ஹராமான பிரசுரங்கள் உணவுகளை இணங்கண்டு
தெரியப்படுத்தல், 25ம் திகதி நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம் உரிமைகள்
அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாத்வீகப் போராட்டத்திற்கு முழு
ஒத்துழைப்பு வழங்கல், முஸ்லிம் அமைச்சர்களே! உடனடியாக அரசை விட்டு
வெளியேறுங்கள், முஸ்லிம் பெண்களே! அபாயா(ஹிஜாப்) விடயத்தில் அபாயாவை
அணிந்து முஸ்லிம்களின் தனித்துவத்தை அடையாளம் காட்டுங்கள்” உள்ளிட்ட
விடயங்களை முஸ்லிம்களை கடைப்பிடிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இன்று ஹலால்-ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம்
சொந்தமானதல்ல. முழு மனித குலத்திற்கும் உரித்தானது. நீங்கள் அவசியம்
அறிந்து கொள்ள வேண்டியவை! எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல்
உலமாவினால் தொகுக்கப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று இன்று வெள்ளிக்கிழமை
காத்தான்குடிப் பிரதேசத்தில் புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை “அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே
விழித்தெழுவது எப்போது??” எனும் தலைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள
சில இடங்களில் புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர்
தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: