
ஹலால்
சான்றிதழ் வழங்கும் அதிகாரம் முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு
பொறுப்பாக்கப்பட்டால் அதனை ஏற்று நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சமீல் (நளீமி )
தெரிவித்தார்.
ஹலால்
விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இவ்விடயத்தை முஸ்லிம்
சமய கலாசர திணைக்களத்திடம் ஒப்படைக்கும் வகையிலான ஆலோசனை ஒன்றை
அமைச்சரவையில் சமர்பிக்க இருப்பது தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அவர்
மேலும் தெரிவிக்கையில்,முஸ்லிம் கலாசார திணைக்களத்திடம் ஹலால் விவகாரத்தை
ஒப்படைப்பது சம்பந்தமாக இதுவரையில் உத்தியோகபூர்வமான அறிவித்தல் எதுவும்
எமக்குக் கிடைக்கவில்லை.எனினும் இவ்விவகாரத்தை ஏற்று நடைமுறைப்படுத்த
வேண்டுகோள் விடுப்பின் முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் அரசாங்க நிறுவனம்
என்ற ரீதியில் அதனை ஏற்று நடைமுறைப்படுத்த தயாரக உள்ளது எனவும்
தெரிவித்தார்.
(விடிவெள்ளி)
0 கருத்துகள்: