பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும். அதுதான் அமைதி, பாதுகாப்புக்கு உண்மையான வழி என்று
இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். இதனால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பாலஸ்தீனத்தின் பல பகுதிகளை இஸ்ரேல்
ஆக்கிரமித்துள்ளது.
இதை எதிர்த்து பாலஸ்தீனியர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானமும் ஐ.நா.வில் சில மாதங்களுக்கு முன்னர் நிறைவேறியது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெருசலேமில் இஸ்ரேல் மக்கள் முன்னிலையில் ஒபாமா பேசியதாவது: பாலஸ்தீனம் தனி நாடாக, சுதந்திர நாடாக உருவாக வேண்டும். இதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.
பாலஸ்தீன விஷயத்தில் இஸ்ரேல் தலையிடுவது சரியல்ல. பாலஸ்தீன மக்களுக்கு சுதந்திரம் நீதி கிடைக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள குழந்தைகள், இஸ்ரேல் ராணுவத்தின் முன்னிலையில் வளர முடியாது.
ஒவ்வொரு நாளும் வெளியில் செல்லாமல் பாலஸ்தீன பெற்றோர் தங்கள் குழந்தைகளை கட்டுப்படுத்தும் நிலை இருக்க கூடாது. அவர்களுக்கு சுதந்திரம், நீதி, உரிமைகள் கிடைக்க வேண்டும். இரு தரப்புக்கும் இடையில் அமைதி ஏற்பட வேண்டியது மிக முக்கியம். அதுதான் உண்மையான பாதுகாப்புக்கு வழி வகுக்கும். இவ்வாறு ஒபாமா பேசினார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் நகருக்கும் முதல் முறையாக ஒபாமா சென்றார். அங்கு பாலஸ்தீன நிர்வாக அதிபர் மமூத் அப்பாஸ் மற்றும் பல தலைவர்களை சந்தித்து பேசினார். இஸ்ரேலுக்கு எப்போதும் அமெரிக்கா ஆதரவாகவே செயல்படும். இந்நிலையில், இஸ்ரேல் மண்ணில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஒபாமா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: