இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தலின் அவசியத்தின் நிமித்தம் உருவாக்கப்பட்டுள்ள OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY அமைப்பின் முதற் கட்ட செயற்பாடாக சுமார் 50 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுககள் ஒன்றிணைந்து ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் Organization of Islamic co-operation (OIC) எனும் அமைப்புடன் தொடர்பிணை ஏற்படுத்தி குறித்த பிரச்சினைகளை ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் பிரதிபலிப்பதற்கான ஏற்ப்பாடுகளை செய்து வருகிறது.

‘OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY’ அமைப்பின் தற்காலிக பேச்சாளாரான கௌஸ் முஹமத் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்;

“ஜெனீவாவில் இயங்கும் Malasia, Indoneasia, Kuwait, pakistan, Oman, qatar, UAE, Iran, Turkey, Tunisia, Algeria. போன்ற நாடுகளில் தூதுவராலயங்கள் ஊடாக தொரர்பினை ஏற்ப்படுத்தி இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது

அத்துடன் இதன் உத்தியோகபூர்வமான அங்குரார்ப்பன வைபவத்தை ஜெனீவாவில் நடாத்த திட்டமிட்டுளோம். இந்நிகழ்வில் கல்விமான்கள் புத்தி ஜீவிகள் மானவர்கள தொழில் சார் வல்லுனர்கள் சட்டத்துறை வல்லுனர்கள் அனைவரையும் ஒருமுகப்ப் படுத்தி செயற்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் உள்ளடகி இந்த அமைப்பை சக்தி பெற செய்து இலங்கை முஸ்லிம்களின் அன்றாட பிரச்சினை தொடர்பாக நீண்ட கால இலக்கை நோக்கி பயணிக்கின்ற ஓர் அமைப்பாக கட்டி எழுப்புவதில் அர்ப்பண சிந்தையுடன் செயற்பட வேண்டிய கால கட்டம் இன்று எழுந்துள்ளது

அத்துடன் மிக விரைவில் அணைத்து தரப்பினரையும் உள்ளடக்கி ஜெனீவாவை தலைமையகமாக கொண்டு மிகப் பிரம்மண்டம்மான கவன ஈர்ப்பு மாநாடு ஒன்றினை நடாத் துவதன் மூலம் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை உலகறிய செய்யவும் அதனூடாக இலங்கை முஸ்லிம்கலின் பிரச்சினைக்கு ஒரு நிரந்த தீர்வு பெற்று கொடுக்கவும் இவ அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது

சர்வதேச நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி எமது கோரிக்கைகளில் வெற்றி பெற முனைப்புடன் செயற்பட நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க உலகின் நாலா பக்கங்களிலும் வாழும் இலங்கை முஸ்லிம்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஆரவமுள்ள அணைத்து தரப்பினரையும் இதில் சிரமம் பாரது பங்கெடுக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம் அத்துடன் இந்த செய்தியை தயவு செய்து உங்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் பகிருமாரும் இலங்கை முளிம்களுக்கு நாடக்கும் அநீதிக்கு முடிவு கட்ட எந்த ஒரு வகையிலாவது பங்களிப்பு வழங்குமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என் மேலும் தெரிவித்தார்

கீழ்வரும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொலைபேசி இலக்கம் ஊஒடாகவும் தொடர்பினை ஏட்படுதுமாறு அன்புடன் வேண்டுகிறோம் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்புகளுக்கு

OVERSEAS CEYLON MUSLIM COMMUNITY
ஈமெயில் – ocmcge@gmail.com
தொலைபேசி இலக்கம் +33753705299

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts