அபாயாவை அணியக் கூடாது என்று சொல்பவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? ஹம்ஸா
சர்வதேச பெண்கள் தினம் நாடெங்கிலும் நினைவுபடுத்தப்பட்டு வந்தாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது என்பதையிட்டுக் கவலையடைகிறேன். இஸ்லாமியப் பெண்கள் எமது நாட்டில் சுதந்திரமாக, அவர்களின் கலாசார ஆடைகளுடன் பயணிக்க முடியாத அச்சம் நிறைந்த சூழலினை அண்மைக்கால சம்பவங்களும், இனவாத உணர்வலைகளைத் தூண்டுகின்ற கோசங்களும் நாளுக்கு நாள் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கிறது. என்ன நிலை வந்தபோதிலும் அபாயாவைக் களையமாட்டோம், அணிதிரண்டு போராடுவோம் என நகர சபை உறுப்பினர் ஹாஜியானி. ஸல்மா அமீர் ஹம்ஸா தெரிவித்தார்.

மாதர் சங்கங்களின் மகளிர் தின நிகழ்வு காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் மாதர் சங்கங்களின் இணைத் தலைவிகளின் தலைமையில் மாதர்களின் பங்குபற்றுதலுடன் நிகழ்ந்தது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு சல்மா அமீர்ஹம்ஸா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மைக்காலமாக இஸ்லாமியப் பெண்கள் தலைநிமிர்ந்து தனிச் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இந்நிலையினை அடைவதற்கு பல சோதனைகளையும், வேதனைகளையும் துச்சமாக நினைத்து வெளிச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது, இவற்றுக்கு முட்டுக் கட்டையாக சில இனவாதச் சிறு குழுக்கள் அவர்களின் கால்புணர்ச்சியின் காரணமாக, எமது சமயப் பெண்களின் அடிப்படை ஆடைகளின் அர்த்தம் புரியாமல் அதனை மட்டுப்படுத்த அறிக்கைள் இட்டுக் கொண்டிருக்கின்றனர்.

உலக நாகரிகத்தின் உன்னதமான ஆடை என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட “அபாயா”வினை அணியக் கூடாது என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? உண்மையான முஸ்லிம் இஸ்லாத்திற்காக, அதன் நாகரிகத்தை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுத்த வரலாற்றுச் சொந்தக்காரர்களின் பரம்பரையில் வந்த நாம் இச் செய்தியைச் கூறும் மிலேச்சத்தனமானவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

எமது பெண்ணினம் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். சட்டக் கல்லூரி, மருத்துவம் மற்றும் இன்னோரன்ன உயர்ந்த துறைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது என்பதை இந்த சந்தோச நாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

பெரும்பான்மை சமுகத்தினர் ஒற்றுமையின் அவசியம் பற்றி ஒரு பக்கம் உணர்த்திக் கொண்டிருக்கும் போது, இனவாதம் பேசுகின்ற சிறு குழுவுக்கு சிறகு முளைத்தது எப்போது? இவர்களின் முயற்சியினை சுக்குநூறாக்கி தட்டிக்கேட்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவருக்குமுண்டு. ஏனெனில் இது சமூகப் பிரச்சினை.

இன்று எதற்கெடுத்தாலும் அரசியல்வாதிகளை மாத்திரம் விமர்சித்துக் கொண்டு அவர்களைத் தூற்றுவதில் அர்த்தம் கிடையாது. பொறுப்புச் சொல்ல வேண்டி கடற்பாடு அவர்களுக்கும் உண்டு என்பதை மறுக்கவி;ல்லை. எமது சமுகத்தினரும் இவ் விவகாரத்தில் ஒற்றுமையுடன் எமது உரிமைகளுக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் போதுதான் வெற்றியின் நிலைகளைத் தொடமுடியும்.

“ஹலால்” சான்றிதலை விட்டுக் கொடுத்த விவகாரம் நாட்டில் முரண்பாடுகள் வளரக்கூடாது என்பதற்காகத்தான் என்பதை இஸ்லாமியர்கள் முன்மாதிரியாக செயற்பட்டார்கள். இதேபோல் பெண்களின் அழகிய ஆடையாகிய அபாயாவினை விட்டுக் கொடு;க்க ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. ஏனெனில் இந்த ஆடையினை அணியுமாறு எவரும் இதுவரை வற்புறுத்தவில்லை. பெண்களுக்கு ஒழுக்கமமான, பாதுகாப்பான ஆடை என உலகில் கண்டறியப்பட்ட ஆடை இந்த அபாயாதான்.

முஸ்லிம் அடிப்படைவாதிகள், புதிய சிந்னையாளர்களின் கருத்துக்கள் என எமக்குள்ளேயே பிரிவினைகளை தோற்றுவிக்காமல் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டிய நல்ல தருணம் இதுவாகும். அதுமட்டுன்றி பெண்கள் அமைப்புக்கள் அணிதிரண்டு தங்களது எதிர்ப்புக்களை இந்த பிரிவினைவாதிகளுக்கு காட்ட வேண்டும்.

பெண்களுக்கு சமூக, பொருளாதார, கலாசார விடயங்களில் ஆளுமை, ஆற்றல் இருந்த போதிலும் அதனைப் பயன்படுத்துவதற்கு வளங்களும், வலுவூட்டல்களும் இல்லாத போதுதான், பெண்ணின் முன்னேற்றமானது தடைப்படுகிறது. சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுகின்ற பெண்கள் எண்ணி;க்கையில் குறைவானவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் பிரச்சினைகளை பெண்களே தீர்த்துக் கொள்ள அறிவூட்டல்கள் அவசியம்.

பெண் பலவீனமானவள் என ஒருபோதும் எண்ணக்கூடாது. வலிமையுடையவள் என நினைத்தால் வலிமைமிக்கவளாகவே ஆகி விடுவாய். என்னால் இயலாது என்று ஒரு போதும் சொல்லாதே! ஏனெனில் ஒரு பெண் வரம்பில்லா வலிமை பெற்றவள். வாழ்வின் வெற்றி உனது உடல் பலத்தைக் காட்டிலும் இஸ்லாமியப் பலத்தில்தான் உள்ளது. நம்பிக்கை கொண்ட பெண் வாழ்வில் எத்தகைய விளைவுகள் ஏற்பட்டாலும் எதிர்த்து நிற்கும் மனம் இருப்பின் வாழ்வில் வெற்றி காண்பது உறுதி என மேற்கண்டவாறு சல்மா அமீர் ஹம்ஸா கருத்துத் தெரிவித்தார்.

(அத தெரண நிருபர்)

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts