இலங்கையை சேர்ந்த இரண்டு பௌத்த பிக்குகள் மீது இந்தியாவின் தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், தஜ்வீத் ஜமாத்தே அமைப்பு உள்ளது என பொதுபல சேனா கூறியுள்ளமை கண்டிக்கத்தக்கது. பயங்கரவாத
அமைப்பான விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் உருவாக்கும் நோக்கில் அவற்றுக்கு ஆதரவளித்து நீர் ஊற்றி வளர்த்தெடுக்கும் அமைப்பே பொதுபல சேனா என்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத்தின் உப தலைவர் எம்.டி.எம். பர்சான் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் இலங்கை பௌத்த பிக்குகள் மீதான தாக்குதல் பின்னணியில் தமிழ் நாட்டு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பான தவ்ஹீத் ஜமாத்தே என்ற சூத்திரதாரி அமைப்பு உள்ளது. தமிழ் நாட்டின் தவ்ஹீத்  ஜமாத்தின் தலைவர் ஜெய்னுல் லாப்தீனுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாகவுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு உள்ளது. அதேபோன்று இலங்கையிலுள்ள தவ்ஹீத் ஜமாத்தேயுடனும் தொடர்புகள் உள்ளன. எனவே இந்த கூட்டணி இணைந்து இவ்வாறான காரியங்களில் ஈடுபட்டுள்ளன என்று பொதுபல சோனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இரு மதங்களுக்குள் பிரச்சினையென்றால் அதனை சுமுகமாக பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இதனைவிடுத்து அடிதடியாலோ, காடைத்தனமாகவோ பிரச்சினைகளை தீர்க்க முடியாது.

இந்நிலையில் இந்தியாவின் தமிழக பகுதிகளில் வைத்து இலங்கை பிக்குகள் தாக்கப்பட்ட பின்னணியில் தவ்ஹீத்  ஜமாத் அமைப்பு இருப்பதாக அப்பாட்டமான பொய்யை இனவாத அமைப்பான பொதுபல சேனா சுமத்தியிருந்தது.
30 வருடகால யுத்தம் முடிவடைந்து சிங்கள-முஸ்லிம் மக்கள் இடையே சுமுகமான உறவு காணப்படும் இந்நேரத்தில் பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு இனவாதத்தை தூண்டி நாட்டில் மீண்டும் ஒரு இனமுரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.

தமிழகத்தில் வைத்து பிக்குகள் தாக்கப்பட்டதன் பின்னணியில் பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், ஈழ உணர்வாளர்களும், வைகோவின் ஆட்களும், நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்களுமே இருக்கின்றனர்.

இந்த தாக்குதலை நாங்கள் தான் நடத்தினோம் என்று அவர்களே ஒப்புக்கொண்டனர். மேலும் இந்திய ஊடகங்களிலும் தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. இவை அனைத்தும் தமிழ் பெயர்கள். மேலும் அவர்களின் மொழிப் பிரயோகமும் இதனை தெட்டத்தெளிவாக விளக்குகின்றது. 'சிங்கள நாயே ஓடிப்போ, தமிழனை கொன்று விட்டு இங்கு வந்தாயா...."என கூறித்தாக்கினர். இந்த வார்த்தைப் பிரயோகங்கள் தமிழ் இனவாத சக்திகள் தான் மேற்கொண்டுள்ளன என்பதை புலப்படுத்தி காட்டுகின்றது. எனவே இலங்கை பௌத்த பிக்குகள் மீதான இந்தத் தாக்குதலை இந்துத்வ கட்சிகளும், தமிழர்களும், புலிஆதரவாளர்களுமே மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் சாதாரண ஒரு சிறுவனுக்கு கூட விளங்கிகொள்ள முடியும். ஆனால் இனவாத அமைப்பான பொதுபல சோனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விளங்கவில்லை. இதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கின்றது.

அதாவது பொதுபல சேனா உள்ளிட்ட சில அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு நாட்டில் குழப்பகரமான நிலையை உருவாக்கி இனவாதத்தை ஏற்படுத்துவதே அவர்களின் அரசியல் நோக்கமாகும்.
நாங்கள் எமது நாட்டுக்கு சார்பாகவே செயற்படுகின்றவர்கள். நாட்டுக்கு எதிராக செயற்படுபவர்கள் அல்ல. இலங்கைக்கு எதிராக செயற்படும் அமெரிக்காவுக்கு எதிராக நாங்கள் வீதிக்கு இறங்கி பல ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால் இதனையெல்லாம் மறந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அமைப்பான பொதுபல சோனா எங்கள் மீது அப்பாட்டமான பொய்யை சுமத்தியுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழகத்தில் புலி ஆதரவாளர்கள், ஈழ உணர்வாளர்கள், மாணவர்கள் என பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வைகோ, சீமான் ஆகியோர் ஜெனீவா சென்று புலிகளுக்கு சார்பாக கதைத்து வருகின்றனர்.

ஆனால் பொதுபல சேனா இதற்கு எதிராக செயற்படவும் இல்லை. எதிராக கருத்து தெரிவிக்கவும் இல்லை. எனவே பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை நீர் ஊற்றி ஆதரவளித்து வளர்த்தெடுக்கும் அமைப்பே பொதுபல சேனா.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts