இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின்
தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் காஷ்மீரில் லட்சக்கணக்கான
முஸ்லிம்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகள் மீது விசாரனைக்கு
வலியுறுத்துமா? குஜராத்தில் அரசு இயந்திரங்களை துணையாக வைத்துக்கொண்டு
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடியியை "இன படுகொலை
குற்றவாளி"யாக அறிவிக்கவும் - மோடியின் மனித உரிமை மீறல் குறித்தும்
சர்வதேச விசாரணைக்கு வழி வகுக்கும் விதத்தில் தீர்மானம் கொண்டு வருமா ஐ.நா?
இந்த தேசத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் மீதும் - இறையாண்மையின் மீதும்
நம்பிக்கை கொண்டுள்ள முஸ்லிம்கள், காஷ்மீரில் "AFSPA" (Armed Forces
Special Power Act) போன்ற கருப்பு சட்டங்களை அமல்படுத்தி, லட்சணக்கணக்கான
முஸ்லிம்களை கொன்று குவிக்கும் அதிகார வர்க்கத்தின் அக்கிரமச் செயல்
களுக்கும், ஆயிரக்கணக்கான இளம் பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டு "கூட்டு
ராணுவ பாலியல் பலாத்காரங்களுக்கு" எதிராக எந்த நடவடிக்கையும் இந்த நாட்டில்
எடுக்கப்படுவதில்லையே, என்ற "ஏக்கம்" இந்திய முஸ்லிம் சமூகத்துக்கு
இருக்கவே செய்கிறது. ............... இலங்கை தமிழர் படுகொலை ஆவணங்களையும்
வீடியோ ஆதாரங்களையும் அடிக்கடி ஒலி பரப்பிய மீடியாக்கள், குஜராத் கலவர
காட்சிகளை என்றாவது மக்கள் மன்றத்தில் - பொது சமூகத்தில் வெளிச்சம் போட்டு
காட்டியதா? குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட இனவெறிக்கு எதிராக யாரும் ஒன்று
திரளவில்லையே என்ற இந்திய முஸ்லிம்களின் "ஆதங்கம்" போக்க முயற்சிக்குமா,
ஐநா??
0 கருத்துகள்: