ஹலால்-ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல்.முழு மனித
குலத்திற்கும் உரித்தானது.நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை! எனும்
தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் தொகுக்கப்பட்ட
துண்டுப்பிரசுரமொன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில்
புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
சமயங்களால் தடை செய்யப்பட்டும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதுமான
உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதான பன்றியிலிருந்து தயாரிக்கப்படும்
அனைத்துப் பொருட்களையும் நாம் பாவிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்வோம்.
'ஹராத்தினைப் புசிக்கும் எந்தவொரு உடம்பும் சுவனம் செல்லாது''என்ற நபி
மொழியும் பல அல் குர்ஆன் வசனங்களும் எம்மை கடுமையாக எச்சரிக்கின்றன.
மார்க்க விரோதிகளினால் மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட அடிப்படையில்
நாம் அறியாத முறையில் புதிய வகை உணவுப்பொருட்களில் சுவையூட்டிகளாகவும்
நிறமூட்டிகளாகவும் சேர்க்கப்படுவதை அறிகின்றோம்.ஆகவே முஸ்லிம்களே!
விழிப்புடன் இருந்து ஹலாலான உணவுகளை மாத்திரம் புசிப்போமாக!
0 கருத்துகள்: