இலங்கையில்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்களில் 14.5 வீதமானவர்கள் தாம்
குறைந்தது ஒரு தடவையாவது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளதை
ஒப்புக்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையொன்று
கூறுகிறது.
ஆசியாவிலுள்ள 6 நாடுகளில் பெண்களுக்கு எதிரான
வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்தத்தகவல்
பெறப்பட்டுள்ளது.
இந்த
ஆய்வில் இலங்கைஇ இந்தோனேசியாஇ சீனா, கம்போடியா, பபுவா நியூகினியா
மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10,000 ஆண்கள்
பங்கேற்றிருந்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எவ்வாறு
பரவுகிறது மற்றும் அவற்றுக்கு பின்னணியிலுள்ள காரணங்கள் தொடர்பில்
பல்தேசிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
இந்த ஆய்வில் பங்கேற்ற 6 நாடுகளைச் சேர்ந்த அனைத்து ஆண்களிலும் கால்
பங்கினர் தாம் குறைந்தது ஒரு தடவையாவது பாலியல் வல்லுறவில்
ஈடுபட்டதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அந்த பாலியல்
வல்லுறவுகளில் அநேகமானவை பொதுவான காதல் உறவுக்குள்
இடம்பெற்றுள்ளன. ஆனால் ஆய்வில் பங்கேற்ற ஆண்களின் பத்தில் ஒரு
பங்கினர் தமது மனைவி அல்லது காதலி அல்லாத பெண்ணொருவரை பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டவர்களில்
அறைபங்கினர் ஒரு தடவைக்கு மேல் தாம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக
தெரிவித்தனர்.
பபுவா நியூகினியாவில்
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்களில் 62 சதவீதமானவர்கள் தாம்
பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக
ஒப்புக்கொண்டுள்ளனர். தமது கடந்த கால வாழ்க்கையில் பாலியல்
வல்லுறவில் ஒரு தடவையாவது ஈடுபட்டதாக ஒப்புக்கொண்ட ஆண்களின்
சதவீதம் இந்தோனேசிய பபுவா மாகாணத்தில் 48.6 சதவீதமாகவும்
இந்தோனேசிய நகரப்பகுதிகளில் 26.2 சதவீதமாகவும் இந்தோனேசியா
கிராமப் பகுதிகளில் 19.5 சதவீதமாகவும் சீனாவில் 22.2
சதவீதமாகவும் கம்போடியாவில் 20.4 சதவீதமாகவும் உள்ளது. அதே
சமயம் பங்களாதேஷின் கிராமப்பகுதிகளில் இந்த சதவீதம் 14.1 சதவீதமாகவும் நகர
ப்பகுதிகளில் 9.5 சதவீதமாகவும் உள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில்
சுமார் முக்கால் பங்கினர் பாலியல் ரீதியாக தமது உரித்துடமையாகவே பாலியல்
வல்லுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டவர்களில் அறைபங்கினர் ஒரு தடவைக்கு மேல் தாம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
பபுவா நியூகினியாவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்களில் 62 சதவீதமானவர்கள் தாம் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய
ஆய்வில் பங்கேற்றவர்களில் சுமார் முக்கால் பங்கினர் பாலியல் ரீதியாக தமது உரித்துடமையாகவே பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
0 கருத்துகள்: