
லெபனானிலுள்ள தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா
அறிவித்துள்ளது. லெபனான் தலைநகர் பேரூட்டிலுள்ள பிரஜைகளை கட்டாயமாக
வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில்
ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை கருத்திற் கொண்டே உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும்
சிரியாவை கருத்திற்கொண்டு குறித்த அறிவித்தல் விடுவிக்கப் படவில்லையென
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் துருக்கியிலுள்ள தமது பிரஜைகளும் விரும்பினால் அங்கிருந்து
வெளியேறலாமென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. லெபனான் மற்றும் துருக்கி ஆகிய
நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதையும் தவிர்க்குமாறு எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. எனினும் லெபனானிலுள்ள தமது தூதரகத்தின் மீது
தாக்குதல் அச்சம் உள்ளதா என்பது தொடர்பில் அமெரிக்கா எவ்வித தகவலையும்
வெளியிடவில்லை.
இதேவேளை சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்கா
வலியுறுத்தியுள்ளது. இதனால் சிரியாவுக்கு ஆதரவான சில தரப்பினரால் மத்திய
கிழக்கு நாடுகளிலுள்ள தமது பிரஜைகளுக்கு ஆபத்து ஏற்படலாமென்பதை
கருத்திற்கொண்டே அமெரிக்கா அவர்களை வெளியேறுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக
சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்: