"உத்தரப்பிரதேசம் பற்றி எரிகிறது : குஜராத் பாணியில் கொலை செய்யப்படும் முஸ்லிம்கள்!
3 பள்ளிவாசல்கள் முற்றாக சிதைந்தது!!
'கோத்ரா'வில் எதேச்சையாக நடந்த ரயில் விபத்தை "ரயில் எரிப்பு" என விஷமப்
பிரச்சாரம் செய்து, முஸ்லிம்களை கருவறுத்த அதே பாணியில், முஸ்லிம்கள்
ஹிந்துக்களை கொலை செய்வது போன்ற
'போலி வீடியோ'வை உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் பரப்பி, முஸ்லிம்களை
இனப்படுகொலை செய்து வருகிறது, பாஜக - ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்கபரிவார்
கூட்டம்.
குஜராத் கலவரத்தை தலைமை தாங்கி நடத்திய மோடியின் வலதுக்
கையான 'அமித் ஷா' தான், தற்போது உ.பி., கலவரத்தையும் தலைமை தாங்கி நடத்தி
வருகிறான்.
ஷாபூர் காவல் எல்லைக்குட்பட்ட 'கட்பா' என்ற கிராமத்தில் 2 மசூதிகளை தீக்கிரையாக்கியதுடன் அங்கிருந்த 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
'லாக்' என்ற கிராமத்தில் ஒரு முஸ்லிமை கொலை செய்ததுடன், சில வாகனங்கள் மற்றும் 3 கடைகளை தீ வைத்துக் கொளுத்தினர்.
'கட்காவூன்' என்ற ஊரில் ஒரு பள்ளிவாசலையும் அதை ஒட்டியிருந்த ஒரு வீட்டையும் தீ வைத்து கொளுத்தி விட்டனர்.
இங்கு 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அதிகாரப் பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
60- 70 முஸ்லிம்களை உயிருடன் கொளுத்த நடந்த சதியை, தக்க நேரத்தில் ராணுவம்
முறியடித்து, ஷாபூரில் உள்ள மதரசா ஒன்றில் அவர்கள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர்.
விவசாய வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் 'ஜவேலி' என்ற இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் உள்ள முஸ்லிம்களின் உயிருக்கும்
உடைமைகளுக்கும் கடும் அச்சுறுத்தல் உள்ளபடியால், கூட்டம் கூட்டமாக ஊரை
விட்டு வெளியேறும் நிலை பரவலாகக் காணப்படுகிறது.
காந்தலா, ஷாமிலி, ஷாபூர் போன்ற இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரப்புறங்களில், தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டும், கேபிள் டிவிக்கள்
அனைக்கப்பட்டும் உள்ளதால், தம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற செய்திகளை
தெரிந்துக் கொள்ளமுடியாத நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர்.
பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
முஸ்லிம்களின் உயிர்களை காப்பதில், காவல்துறையும் ராணுவமும் 'கண்ணும்
கருத்துமாக' செயல்படுவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அவர்களுக்கான
அடிப்படை தேவை விஷயங்களிலோ - தங்க வைக்கும் விஷயங்களிலோ அரசு எந்திரங்கள்
செயலற்றதாக உள்ளது.
தற்போது, இந்தக் கலவரம் முசப்பர் நகர்
மாவட்டத்தையும் கடந்து, ஷாம்லி, மீரட் உள்ளிட்ட இடங்களுக்கும்
பரவியுள்ளதால், மாநிலம் முழுவதும் பெரும் பதட்டம் காணப்படுகிறது.
0 கருத்துகள்: