இலங்கையில்
இந்திய உதவி வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நேரில்
ஆராய்வதற்காக தற்போது இலங்கை வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சின்
அதிகாரி...கள் குழு நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்தது.
இக்குழுவில் அமைச்சின் விசேட செயலாளர் பி.எஸ். ராகவன், மேலதிக செயலாளர் ஏ.ஆர். சிஹாக், நிதிப் பணிப்பாளர் அனுஸ்ரே ஸ்ரீவஸ்தவா, கட்டிடக் கலை நிபுணர் கிர்டெக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தலா 5000 ஆயிரம் வீடுகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏனைய 42 ஆயிரம் வீடுகளும் வடமாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள உறுகாமம், புல்லுமலை மற்றும் மங்களகம ஆகிய கிராமங்களில் இந்த வீடமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது.
மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய வெளியுறவு அமைச்சின அதிகாரிகள் குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ; முதலாவது செயலாளர்(அபிவிருத்தி மற்றும் கூட்டுத்தாபனம்) ஜஸ்டின் மோகனும் இடம் பெற்றிருந்தார்.
உறுகாமம் கிராமத்திற்கு சென்றிருந்த குழுவினர் அந்தப் பகுதி மக்களையும் பயனாளிகளையும் சந்தித்து முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென ஏற்கெனவே 12 வீடுகள் சிபார்சு செய்யப்பட்டிருந்த போதும் பின்னர் 8 வீடுகளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
இது குறித்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டு கிராமத்தை விட்டே 25 வருட காலம் புலிகனால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் முஸ்லிம் மக்கள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக செங்கலடி பதில் பிரதேச செயலாளர் நவரூபரஞ்சனி முகுந்தன் இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இந்திய அதிகாரிகளுக்கு விளக்கினார்.
மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளையும் இக் குழு சந்தித்து உரையாடியது. கிழக்கு மாகாண விஜயத்திற்கு முன்னதாக நேற்று வட மாகாணத்திற்கு இக் குழு சென்றிருந்தது. நாளை மறுதினம் மத்திய மாகாணம் செல்லவிருப்பதாக தெரியவருகின்றது.
இக்குழுவில் அமைச்சின் விசேட செயலாளர் பி.எஸ். ராகவன், மேலதிக செயலாளர் ஏ.ஆர். சிஹாக், நிதிப் பணிப்பாளர் அனுஸ்ரே ஸ்ரீவஸ்தவா, கட்டிடக் கலை நிபுணர் கிர்டெக்ஸ் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
போருக்கு பின்னர் இந்தியா இலங்கைக்கு வழங்க முன் வந்துள்ள 49 ஆயிரம் வீடுகளில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தலா 5000 ஆயிரம் வீடுகள் தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஏனைய 42 ஆயிரம் வீடுகளும் வடமாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திலுள்ள உறுகாமம், புல்லுமலை மற்றும் மங்களகம ஆகிய கிராமங்களில் இந்த வீடமைப்புப் பணிகள் கடந்த மே மாதம் 15ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது.
மேற்படி வீடமைப்புத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து நேரில் பார்வையிட வந்த இந்திய வெளியுறவு அமைச்சின அதிகாரிகள் குழுவுடன் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ; முதலாவது செயலாளர்(அபிவிருத்தி மற்றும் கூட்டுத்தாபனம்) ஜஸ்டின் மோகனும் இடம் பெற்றிருந்தார்.
உறுகாமம் கிராமத்திற்கு சென்றிருந்த குழுவினர் அந்தப் பகுதி மக்களையும் பயனாளிகளையும் சந்தித்து முன்னேற்றம் தொடர்பாக கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கென ஏற்கெனவே 12 வீடுகள் சிபார்சு செய்யப்பட்டிருந்த போதும் பின்னர் 8 வீடுகளே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன

0 கருத்துகள்: