காத்தான்குடி
பிரதேசத்தில் அரை நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஷெயின் மௌலானா பள்ளிவாயல்
வியாழக்கிழமை தொடக்கம் உடைக்கப்பட்டு வருகின்றது.
காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள இந்த பள்ளிவாயலின் பழய கட்டிடத்தை உடைக்கும் பணிகள் இடம் பெற்றுவருகின்றன.
இப்பள்ளி வாயல் அமைந்துள்ள இடத்தில் புதிய பள்ளிவாயலை மாடிக்கட்டிடமாக
அமைப்பதற்காகவே இந்த பள்ளிவாயலின் பழமை வாய்ந்த கட்டிடம்
உடைக்கப்படுகின்றது.
இட வசதி கூடிய வகையில் இந்த இடத்தில் புதிய பள்ளிவாயல் கட்டிடம் அமைக்கப்படவுள்ளாக இதன் நிருவாகிகள் தரிவித்தனர்.
இந்த பழய பள்ளிவாயல் கட்டிடம் நேற்று பெக்கோ இயந்திரத்தினால் உடைக்கப்பட்டது.
0 கருத்துகள்: