கடந்த ரமழான் 29ம் நாள் ஷவ்வால் மாத தலைப் பிறை விஷயத்தில் கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஜம்மிய்யதுல் உலமாவினர் வேண்டுமென்று மறுத்துவிட்டு பெருநாள் தினத்தில் பொது மக்களில் ஒரு சாராரை நோன்பு பிடிக்க வைத்த மாபாதக செயலை செய்தார்கள்.

கிண்ணியாவில் தென்பட்ட பிறையை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைப் பிறை செய்தியை நாடு முழுவதும் எத்தி வைத்ததின் விளைவாக இலங்கையின் பெரும்பாலான முஸ்லிம்கள் வியாழக்கிழமையும் ஜம்மிய்யதுல் உலமாவை நம்பியதின் விளைவாக சில முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமையும் பெருநாள் கொண்டாடினார்கள்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் கிண்ணியா கிளை சகோதரர்கள் தாங்கள் பிறை பார்த்த அடிப்படையில் முதல் நாள் வியாழக்கிழமையே (தலைமைக்கு மாற்றமாக மார்க்க அடிப்படையில்) பெருநாள் கொண்டாடினார்கள்.

நிலைமை இப்படியிருக்க வானொலியில் உரையாற்றிய உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி அவர்கள் முதல் நான் பிறை கண்ட அடிப்படையில் பெருநாள் கொண்டாடியது தவறு என்றும் அப்படி கொண்டாடிய அனைவரும் தவ்பா செய்ய வேண்டும் என்றும் கடும் வார்த்தைகளினால் சாடினார்.

கண்ணால் கண்ட தலைப் பிறையை மறுத்தது மட்டுமன்றி ஒன்றுக்கு பல பொய்களையும் நாகூசாமல் கூறியவர் தான் சொல்வது தான் சரி என்பதில் பிடிவாதமாகவும் இருந்தார்.

ஒரு நாடகம் அரங்கேறியது.

பிறை விவகாரத்தில் மக்களை மடையவர்களாக முனைந்த அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவும், கொழும்பு பெரிய பள்ளி நிர்வாகத்தினரும் இறைவனின் அருளினார் அதில் தோற்றுக் போனார்கள்.

ஆனால் கிண்ணியா உலமா சபையினரோ தாங்கள் பிறை கண்டு பெருநாள் கொண்டாடிய விஷயத்தில் தலைமையுடன் பலத்த முரன்பாட்டிலேயே இருந்தார்கள்.

கிளைக்கும், தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையை சரி செய்வதற்காக அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் ஒரு பேச்சுவார்த்தை கிளையுடன் நடத்தப்பட்டது. குறித்த பேச்சுவார்த்தையில் கிண்ணியாவில் பிறை கண்டதும் சரி, கொழும்பில் எடுத்த முடிவும் சரி என்ற ஒரு முடிவை அறிவித்தார்கள்.

சுருக்கமாக சொல்லப் போனால் ஷவ்வால் மாதத்திற்கு இரண்டு தலைப்பிறை என்று ஒரு ஆச்சரியமான பத்வாவை வெளியிட்டார்கள்.

மீண்டும் ஒரு நாடகம்.

ஷவ்வால் மாத தலைப்பிறை விஷயத்தில் மக்களை குழப்பியவர்கள் மீண்டும், துல்கஃதாவிலும் பொது மக்களை மடையர்களாக நினைத்துக் கொண்டு குழப்ப முனைகின்றார்கள்.

ஆம் கிண்ணியாவில் தென்பட்ட பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடியவர்களும் சரியாகவே செய்தார்கள், அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறி ஜம்மிய்யதுல் உலமா எடுத்த முடிவும் சரியானதே என்று சொன்னவர்கள் ஷவ்வாலுக்கும் இரண்டு தலைப் பிறையை (?) உண்டாக்கிஆச்சரிய பத்வாவை வழங்கினார்கள்.

ஆனால் மீண்டும் துல்கஃதா தலைப் பிறை விஷயத்திலும் தமது மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு மார்க்கத்தை விட்டுக் கொடுத்துள்ளார்கள்.

கிண்ணியாவில் பிறை தென்பட்டதின் அடிப்படையில் கடந்த 05 ம் தேதி ஷவ்வால் மாதம் 29 ம் நாளாகும் அதனடிப்படையில் அன்று (வியாழக்கிழமை) பிறை பார்க்க வேண்டிய தினமாகும். அன்று இலங்கையில் எப்பாகத்திலும் பிறை தென்படாத காரணத்தினால் ஷவ்வால் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டதின் அடிப்படையில் இன்று இலங்கையில் துல்கஃதா முதல் பிறை ஆரம்பிக்கின்றது.

ஆனால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினர் இன்று தான் துல்கஃதாவின் தலைப் பிறை பார்க்கும் படி குறுந்தகவல் (SMS) மூலம் பொது மக்களுக்கு அறிவித்திருந்தார்கள்.

உண்மையில் ஷவ்வால் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்ட நாளில் தலைப் பிறை பார்க்கும்படி ஜ. உலமாவினர் கூறியிருந்தார்கள்.

வாக்குறுதி மீறிய பொய்யர்கள்.

கிண்ணியா உலமா சபையினரிடத்தில் கொடுத்த வாக்குறுதியின்படி, அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா ஒத்துக் கொண்ட அடிப்படையில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்திருந்தால் 05 ம் தேதி மாலை தலைப் பிறை பார்த்திருக்க வேண்டும்.

ஆனால் அன்று பார்க்காமல் 06 ம் தேதி மாலை பார்த்ததிலிருந்து இவர்கள் கிண்ணியாவில் கண்ட பிறைத் தகவலை ஏற்றுக் கொண்டதாக கிண்ணியா உலமா சபையினரிடத்தில் சொன்னவையும், அதனை நாட்டு மக்களுக்கு அறிவித்ததும் பொய்யென்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

துல்கஃதாவின் தலைப் பிறையில் ஷவ்வால் மாத 30 ம் நாள்.

05 ம் தேதி மாலை பிறை தென்படாத காரணத்தினால் ஷவ்வால் மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டது. உண்மையில் இன்றைய தினம் துல்கஃதாவின் தலைப் பிறையாக இருக்கின்றது.

ஆனால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் வரட்டு பிடிவாதத்தினால் இன்று அவர்களுக்கு பிறை தென்படவில்லை என்று கூறி அவர்களின் கணக்குப் பிரகாரம் ஷவ்வாலை இன்று அவர்கள் 30 ஆக முடிவெடுக்கின்றார்கள்.

“இந்த முடிவின் படி உண்மையான துல்கஃதாவின் தலைப் பிறையில் இவர்கள் சென்ற மாதத்தை (ஷவ்வால்) 30 ஆக பூர்த்தியாக்குகின்றார்கள்.

ஆக உண்மையில் துல்கஃதாவின் பிறை இரண்டாக இருக்கும் போது அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் (நாடகப்) பிறை ஒன்றாகும். அதாவது அவர்களுக்கு தலைப் பிறையாகும்.

கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமாவினர் இன்று தலைப் பிறையை ஆரம்பிக்கின்றார்கள்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் இந்த நாடகத்தை தெளிவாக புரிந்து கொண்ட கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபையினர் கடந்த 05 ம் தேதி துல்கஃதாவின் தலை பிறை பார்த்து, பிறை தென்படாத காரணத்தினால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்தார்கள்.

(இது கிண்ணியா உலமா சபையின் தலைவர் சகோ. ஹிதாயதுல்லாஹ் மவ்லவியிடம் கேட்டு உறுதிப்படுத்திய தகவலாகும்).

கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபையினர் அகில இலங்கை ஜம்மிய்துல் உலமாவுக்கு பிறை விஷயத்தில் கட்டுப்படாமல் தெளிவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ளார்கள்.

கிண்ணியா ஜம்மிய்யதுல் உலமா சபையினருக்கு இன்று துல்கஃதாவின் தலைப் பிறை ஆரம்பித்துவிட்டது. ஆனால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கு இன்று இரவு ஷவ்வால் மாதத்தின் 30 ம் நாளாகும்.

மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கும் அகில இலங்கை ஜ. உலமாவினர்.

ஆக மொத்தத்தில் மக்களை மடையர்களாக இவர்கள் நினைத்துக் கொண்டு மார்க்க விஷயத்தில் இப்படி விளையாடுகின்றார்கள் என்பதை நாம் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

மாதா மாதம் பிறை கணக்கை யார் பார்க்கப் போகின்றார்கள்? மக்கள் அனைத்தையும் அவசரமாக மறந்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இப்படியாக கீழ்த்தரமான காரியத்தில் ஜ. உலமாவினர் ஈடுபடுகின்றார்கள் என்பதை நாம் தெளிவாக அறிய முடிகின்றது.

கொஞ்சம் கூட அல்லாஹ்வுக்குப் பயப்படாமல் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளையாடி, மக்களையும் ஏமாற்றி படைத்த இறைவனையும் ஏமாற்றலாம் என்ற கேவலமான எண்ணத்தில் இவர்கள் செயல்படுகின்றார்கள் என்பதை நாம் சந்தேகமற புரிய முடிகின்றது.

வல்ல அல்லாஹ் இவர்களின் சுயரூபத்தை மீண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றான் அல்ஹம்துலில்லாஹ்.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts