புனித
அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்திற்குள் சுமார் 150 யூதக் குடியேற்றவாசிகள்
இஸ்ரேல் பொலிஸ் பாதுகாப்புடன் கடந்த 2013 -09 -09 திகதி ஊடுருவியுள்ளனர்.
அல் அக்ஸா முகாரிப் வாயிலூடாக 150 யூத கடும்போக்காளர்கள் பள்ளிவாசல்
வளாகத்திற்குள் நுழைந்ததாக ஜெரூசலம் நிதியம் மற்றும் அல் அக்ஸா விவகாரம்
தொடர்பான இயக்குனர் ஷெய்க் அஸ்ஸாம் அல் சாதிப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குழு கிழக்கு சுவர் ஊடாகச் சென்று அல் சல்சலா வாயிலூடாக
வெளியேறியுள்ளது. இவர்கள் பள்ளி வாசல் வளாகத்திகுள் பாடல்கள் பாடி
மதவழிபாடுகளில் ஈடுபட்டதாக அல் சாதிக் குறிப்பிட்டார்.
யூத
கடும்போக்காளர்களின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் திட்டத்தை
வெளிக்காட்டுவதோடு பள்ளிவாசல் எதிர்கொண்டிருக்கும் அபாயத்தை காட்டுவதாக
ஜெரூசலம் இஸ்லாமிய உயர் ஆணையத்தின் தலைவர் ஷெய்க் எக்ரிமா சப்ரி
எச்சரித்துள்ளார்.
அல் அக்சா வளாகத்தில் கி. பி. 70 இல் ரோமர்களால் அழிக்கப்பட்ட யூதர்களின் இரண்டாவது கோயில் இருப்பதாக இஸ்ரேலியர் நம்புகின்றனர்.
குறிப்பு: மேலே உள்ள படம் மஸ்ஜித் அல் அக்ஸா பள்ளிவாசல் அல்ல. அது அல்- ஸக்ராஹ் மஸ்ஜித் எனும் The Dome of the Rock என்பதாகும். அல் அக்ஸா பள்ளிவாயிலின் தோற்றத்தை முஸ்லிம்களின் மனங்களில் இருந்து அகற்றவே, யூதர்கள், மஸ்ஜித் அல் அக்ஸா என்று எங்கெல்லாம் குறிப்பிடுகிறார்களோ அங்கெல்லாம் மேலே உள்ள படத்தை காட்டி விடுவார்கள்.
0 கருத்துகள்: