இன்று
கொழும்பு மாநகரின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி அபிவிருத்தியை
நோக்கி நகர்த்தப்படும் காலகட்டமாகும். கொழும்பையும் தெற்கையும் இணைக்கும்
சர்வதேச அதிவேக பாதையொன்று நிர்மாணிக்கபட்டாகிவிட்டது.
அதேவேளை யுத்தத்தால் பாதிப்புற்ற வடக்கு பிரதேசத்தை இணைத்து ரயில் பாதைகள் சீரமைக்கப் படுகின்றன, நாட்டின் மிகப் பெரிய கட்டிட நிர்மாண பணிகள் ஜனாதிபதியின் ஊரான ஹம்பந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெருமதிமிக்க குறிப்பிட்ட “ வெள்ளை யானை” யாகியுள்ள அபிவிருத்தி திட்டத்தில், நவீன வசதிகளை கொண்ட துறைமுகம், சர்வதேச விமான நிலையமொன்று மற்றும் சர்வதேச கிரிக்கட் விளையாட்டரங்க மொன்று ஜனாதிபதியின் பெயரிலேயே நிர்மாணிக்க பட்டுவருகின்றது. இந் நிர்மாண பணிகளுக்கு பின்னணியில் இருப்பது பீஜிங் நகரமாகும், இதன் மூலம் இந்திய உபகண்டத்தில் சீனாவின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற்றுள்ளது, கட்டிட நிர்மாண பணிகளுக்காக, முதலீடுகளுக்கு புறம்பாக தொழிலாளர்களும் சீனாவிலிருந்தே வரவழைக்கப் பட்டுள்ளார்கள் .
அதுவும் தொழிலில்லா பிரச்சினை அதிகமுள்ள பிரதேசமாகிய ஹம்பன்தொட்டைக்கு இவர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கொழும்பு நகரமானது ஆசியாவின் ஏழ்மைமிகு நகரமாக காணப்படும் அதேவேளை ராஜபக்ச அரசாங்கத்தின் பங்காளி நிறுவனங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவிகள் மூலம் ஆடம்பரமான சொகுசு கட்டிடங்களை நிர்மாணிக்கின்றார்கள். .
பல்தேசிய நிறுவனகள் மூலம் இவற்றின் நேரடி பயன்கள் பெற்றுக் கொள்ளப்படும். கசினோ சூது மன்னனான அவுஸ்திரேலிய பிரஜை ஜேம்ஸ் பேகருக்கும் ராஜபக்ச களுக்குமிடையிலான உடன்படிக்கையின் படி 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கசினோ விடுதியொன்று கொழும்பு நகர் பகுதியில் தற்போதைக்கும் கட்டி முடிக்கும் தருவாயிளுள்ளது இதற்கானதொரு சிறந்த உதாரணமாகும் .
இவ்வாறான பல நிர்மாண பணிகள் காணப் பட்டாலும் இவற்றின் நிர்மாணவேலைகளை விட மிக வேகமாக கட்டி முடிக்கப் பட்ட நிர்மாணமாக “ஸ்ரீ சம்புத்ததத்வ ஜெயந்தி மந்திரய” என்ற விசாலமான கட்டிடத் தொகுதி குறிப்பிடத்தக்கதாகும். யுத்ததிற்கு பின் இரண்டு வருட காலப் பகுதியில் கட்டி முடிக்கப் பட்ட இக்கட்டடதொகுதியை உலகில் ஆகப் பெரிய பௌத்த நூலகம் என்று கூறப் படுகின்றது. 2012ல் ஆரம்பிக்கப் பட்ட பௌத்த அடிப்படைவாத அமைப்பாக இனங்கான படும் பொதுபல சேனாவின் பிரதான செயலகம் இக்கட்டிடதிலேயே அமையப் பெற்றுள்ளது.
பொது பல சேனாவின் கூற்றுப்படி அவர்களே இலங்கை தீவில் பௌத்த மதத்தின் உண்மையான பிரதான காவலர்கள் ஆவார்கள் , ஆனால் பெரும் பான்மையான பௌத்தர்களின் கூற்றுப் படி, “பொது பல சேனா” என்போர் பௌத்த மதத்தை ஒழித்து கட்டுவதாக கூறும் இல்லாத பேயை கண்டதொரு கூட்டமாகும். மேலும் அவர்களின் கூற்றுப்படி கடந்த காலங்களை விட மிக மோசமான அழிவுக்கு தற்போதைய பௌத்த மதம் உள்ளாக்கப் பட்டுள்ளது.
சட்டத்தை கையிலெடுத்து ஒரு சமய போலிசாக செயற்படும் பி பி எஸ் கடந்த காலங்களில் முஸ்லிம் கிறிஸ்தவ தாக்குதல்களுக்கு பின்னணியில் உள்ளார்கள் . இவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இலங்கை போலிஸ் எப்போதும் தடையாக இருந்ததே இல்லை. இவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள். இலங்கையின் வியாபார வர்த்தக துறை முஸ்லிம்களால் கட்டுப்படுத்த படுவதாக கூறுகிறார்கள் .
இஸ்லாமிய அடிப்படைவாதம் இந் நாட்டில் பரவுவதாகவும் . முஸ்லிம் வைத்தியர்கள் சிங்கள இனப் பெருக்கத்தை இரகசியமாக கட்டுபடுத்துவதாகவும் மகப்பேற்றுக்காக வரும் சிங்கள தாய் மார்களுக்கு மலட்டு தன்மையை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். பௌத்த சமயத்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றுவதாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராக இவர்கள் பிரதானமாக குற்றம் சுமத்துகிறார்கள்.
அமைச்சர் வாசுதேவ நானயக்கார அவர்கள் கூறுவது போல் பி பி எஸ் ஒரு அடிப்படைவாத அமைப்பாகும், அதேபோல் சிரேஷ்ட ராஜ தந்திரியொருவரான தயான் ஜெயதிலக அவர்களின் கூற்றுப்படி , “ அவர்கள் சிங்கள சமூகத்தின் இருட்டான பகுதியொன்றிலிருந்து உருவான இனவாத தீவிரவாத பாசிஸ்ட் வாதிகளாகும். நாட்டின் மேல்நிலை அறிஞர்களுள் ஒருவரான பேராசிரியர் , வண பெல்லன்வில விமலா ரதன தேரோ அவர்கள் கூறுவது போல் பெரும்பான்மையான பௌத்த பிக்குகளுக்கும், பி பி எஸ் க்கும் தொடர்புகள் இல்லை.
யாழ் பல்கலை கழகத்தின் போதனாசிரிரியர் குமார் வடிவேல் குருபரன் கூறுவது போல், பி பி எஸ் மேடை ஏற தொடங்கிய பின் அடிப்படை வாத அரசாங்கம் மத்தியஸ்தமாக செயல் படுவதாக பூச்சாண்டிகாட்ட தொடங்கியுள்ளது.
பி பி எஸ் இன் துறவியல்லாத பொது மக்கள் பிரிவு தலைவரான “டிலந்த விதானகே” யின் கூற்றுப்படி “ பௌத்த மதம் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ள காரணத்தால் பி பி எஸ் ஐ உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது . 75% சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்டதொரு நாட்டிலிருந்து கொண்டே டிலந்த இவ்வாறு கூறுகின்றார். என்பது கவனிக்க தக்கது.
அநேகமான இலங்கையர்களின் கூற்றுப்படி , பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சேவின் பின்னணியிலேயே பி பி எஸ் உருவாக்கப் பட்டுள்ளது. அனால் அவர் இதை மறுத்துரைத்துள்ளார், இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடைய இனவாத ஷிவ சேனா, மற்றும் இந்து அடிப்படைவாத இயக்கமான ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங், ஆகியவற்றுடன் பி, பி, எஸ், ஐ ஒப்பிடும் போது பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன. ஆனால் இவ்வாறு ஒப்பிட்டு நோக்குவதை டிலந்த விதானகே மறுத்துரைத்துள்ளதுடன் “தங்களுக்கு அரசியல் பலம் ஏதும் இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதி பதியின் சகோதரரான கோதாபய ராஜபக்ச இதன் பின்னணியில் இல்லை என்று கூறினாலும் அவர் இந்த அமைப்பை பின்னணியிலிருந்து போஷித்து வருகிறார் என்றே கூற வேண்டும். கடந்த மார்ச் மாதம் கோதாபய ராஜபக்சவினால் காலியில் பி பி எஸ் இன் மத்திய நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது, டிலந்த விதானகேயின் கூற்றுப்படி, கோதாபயவால் திறந்து வைக்கப் பட்டப் குறிப்பட்ட கட்டடம் “ஜேர்மன் நாட்டு பிரஜை” ஒருவரால் அன்பளிப்பு செயப்பட்டுள்ளதாகும். பி பி எஸ் இன் பயிற்சி நிலைய மொன்றாகவே குறிப்பிட்ட அக்கட்டிடம் பாவிக்க படவுள்ளது.
ஆனால் மேற்ககுறிப்பிட்ட ஜெர்மன் பிரஜையின் கூற்றுப்படி மேற்படி கருத்து வித்தியாசமாகவே காணப்படுகின்றது . ஒரு பௌத்தரான குறிப்பிட்ட ஜெர்மன் பிரஜை மைக்கல் கரைட் மேயர் எமக்கு (The Global Mail க்கு) தெரிவிக்கையில் , “ மெத் செவன எனும் தமது அன்பளிப்பானது 2007 ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டதாகும், இது பி பி எஸ் க்கு வழங்கப் பட்ட கட்டிடமொன்றல்ல” என்று மைக்கல் கரைட் மேயர் கூறுகின்றார்.
சமூக ஒழுக்க நெறிகளுகளுக்காக குரல் கொடுப்பதாக கூறும் இவர்கள், இலங்கையில் சகஜமாக காணப்படும் கசினோ நிலையங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. ராஜபக்ஷே ஆதரவாளர்களால் குறிப்பிட்ட இக்கசினோ நிலையங்கள் நடத்தப் படுவதால் தான் பி பி எஸ் இவற்றுக்கு எதிராக குரல் கொடுப்பது இல்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.
கொழும்பிலுள்ள மிகப் பழமைவாய்ந்த இந்து கோயில் ஒன்றின் அருகாமையிலேயே குறிப்பிட்ட , 350 அமெரிக்க டொலர் பெறுமதி மிக்க கசினோ நிலையம் நிர்மாணிக்கப் படவுள்ளது, இந்த பொருத்தமற்ற தன்மையை பற்றி டிலந்த விதானகேயிடம் வினவிய போது , “ அரசர்களின் செயற்பாடுகளை புத்தர் தடுத்தது கிடையாது “ என்பதே அவர் எமக்களித்த பதிலாகும்.
மேலும் அவர் இவ்வாறு கூறினார், “ இலங்கையில் பல கசினோ நிலையங்கள் தற்போதும் இயங்கி கொண்டிருக்கின்றன . ஆனால் இது சம்பந்தமாக இதுவரை எவருமே எதிர்புகளை காட்ட வில்லை, ஆனால் இந்த அவுஸ்த்ரேலிய பிரஜையால் ஆரம்பிக்கப் படவுள்ள கசினோ நிலையத்தை பற்றி எல்லோரும் கதைகின்றார்கள்.
நாங்கள் கூறுவது என்ன வென்றால் அவுஸ்த்ரேலிய பிரஜையால் ஆரம்பிக்கப் படவுள்ள கசினோ நிலையத்தை எதிர்பதென்றால், நாட்டிலுள்ள ஏனைய கசினோ நிலையங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும் என்பதாகும். தனிப்பட்ட வகையில் நான் சூது விளையாட்டுக்கு எதிரானவன். ஆனால் இயக்கம் என்ற வகையில் கசினோ எமக்கு பிரச்சினை கிடையாது.’’ என்று கூறுகின்றார்.
டிலந்த விதானகேயுடன் நாம் உரையாடிக் கொண்டிருக்கையில் ஞானசார சாதுவும் எங்களுடன் இணைந்து கொண்டார், அவர் பி பி எஸ் இன் நிறுவுனர்களில் ஒருவர். அதேவேளை அவ்வியக்கத்தின் செயலாளராகவும் உள்ளார்.
அவர்கள் இலங்கையில் புத்த தர்மத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயங்களை பற்றி பேசினார்கள், இவ்வேளையில் இவர்களிடத்தில் ஒரு கேள்வியை முன்வைத்தேன். “ 75% பௌத்தர்களுள்ள இந் நாட்டில் ஏனைய மத்ததவர்கள் சிரும்பானமையாக வாழ்கிறார்கள், நாட்டின் தலைவர் ஒரு பௌத்தர் என்ற விடயம் மிகத்தெளிவாக இருந்தும், ஏன் பௌத்த தர்மம் சவால்களுக்கு உட்பட்டுள்ளதாக கூறிவருகிறீர்கள்.” என்று கேட்டேன்.
இதற்கு பதிலளித்த ஞான சார “ இந் நாட்டில் மட்டுமல்ல , சர்வதேச ரீதியிலும் பௌத்த தர்மதிற்காக பி பி எஸ் குரல் கொடுக்கும்”.என்று பதிலளித்தார். அண்மையில் இலங்கையில் தடை செய்யப் பட்ட “டைம்ஸ்” சஞ்சிகையை இதற்கு உதாரணமாக முன்வைத்தார்.
அண்மைக்காலங்களில் முஸ்லிம் வியாபார நிலையங்களுக்கு எதிராக நடத்தப் பட்ட தாக்குதல்கள் பற்றி, பி பி எஸ் க்கு எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் பற்றியும் அவரகளிடம் வினவினேன். ஞான சார, விதானகே ஆகிய இருவரும் இக்குற்றச்சாட்டை நிராகரித்தனர்.
முஸ்லிம் , இஸ்லாம் என்று கூறும் போதெல்லாம் ஞானசாரவை கோபம் கொள்ளச் செய்வதை அவதானிக்க முடிந்தது. சாதாரணமாக ஒரு பௌத்த துறவிக்கு சகிப்பு தன்மையற்ற இந்த நிலைபாடு இருக்க கூடாத ஒன்றாகும்.
“ அவர்களை பற்றி கதைக்க வேண்டாம்”, ஞானசார உயர்தொனியில் சப்தமாக கூறினார்,
“ முஸ்லிம்கள் அனைவருமே கெட்ட மனிதர்கள், அவர்கள் இங்கு குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள்.”
“ முஸ்லிம்கள் எல்லோருமே ..?” நான் அவரிடம் கேட்டேன்.
“ ஆம் எல்லோரும் ஒன்றுதான் ” ஞானசார உச்ச தொனியில் பதிலளித்தார்.
தொடர்ந்தும் அதே பாணியில் கூறினார் “ முஸ்லிம் அடிப்படைவாதத்தை நிறுத்தும் தேவை எமக்குள்ளது. எங்கள் கலாசாரத்தை இல்லாதொழிக்க அவர்களுக்கு இடமளிக்க முடியாது,”
இதற்கிடையில் விதானகே குறுக்கிட்டு , “ பௌத்தர்களை கோபமூட்டும் செயல்களை இவர்கள் தொடர்ந்தும் செய்து வருகிறார்கள் .ஆனால் பௌத்தர்கள் மிகவும் பொறுமை காத்து வருகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
“ முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லா வசதிகளும் உள்ளது.கொழும்பில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். உங்கள் நாட்டில் முஸ்லிம் ஒருவருக்கு ஒரு மேயராக ( நகர பிதாவாக ) வரமுடியுமா,? அதற்கான சந்தர்பம் வழங்க பட்டுள்ளதா?” என்று என்னிடம் வினா தொடுத்தார்,
“ தேர்தல் மூலம் தெரிவான மக்கள் பிரதி நிதிகள் ஏராளமாக அவுஸ்த்ரேலியாவில் உள்ளார்கள் ”,என்று நான் பதிலளித்தேன் . எனது பதிலால் திருப்தியடையாத விதானகே தொடர்ந்தும் என்னிடம் கேட்டார், “ இந்த மாநகரின் மேயர் ஒரு முஸ்லிமாக இருக்கையில், முஸ்லிம்களால் சமாதானமாக இந்த நாட்டில் வாழ முடியாதுள்ளது என்று எவ்வறு உங்களால் கூற முடியும்”? என்று கேட்டார்.
நான் அவ்வாறான விடயமொன்றை கூறவில்லை வில்லை என்றும், சற்று முன் , “முஸ்லிம்கள் அனைவருமே கெட்டவர்கள்” என்று ஞானசார கூறியதையும் சுட்டிக் காட்டினேன்.
மேலும், “ இந்து, கிறிஸ்தவ, மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் ” பற்றி தாம் கொண்டுள்ள நிலைப்பாடு என்னவென்று ஞானசாரவிடம் கேட்டேன்,
“ நாங்கள் எதிர்ப்பது அடிப்படைவாதிகளை மாத்திரமே” என்று அவர் பதிலுரைத்தார்.
“ பௌத்த அடிப்படைவாதிகள் பற்றிய என்ன கூறுகின்றீர்கள் ?” என்று அவரிடம் கேட்டேன்.
“ அவர்கள் எங்கே உள்ளார்கள்” என்று ஞானசார திருப்பி என்னிடம் கேட்டார்.
“ சில வேளை இந்த இடத்திலும் இருக்கலாம்” என்று நான் கூறியதுடன், இலங்கை சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரபல சமூக ஆர்வலர் தயான்ஜெயதிலக போன்றவர்களாலும் “பி பி எஸ் ஒரு அடிப்படைவாத இயக்கம்” என்று கூறியுள்ளது பற்றியும் தெரிவித்தேன்.
“ அவர்களுக்கு கிறுக்கு” என்று ஞானசார தெரிவித்ததுடன் அவர்கள் அபாயகரமானவர்கள் என்றும் “ என் ஜி ஓ” க்களால் பணம் பெறுபவர்கள் என்றும் கூறினார்.
“ ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் அவர் தம்பி கோதாபய ஆகியோர் நல்ல பௌத்தர்களா ?” என்று அடுத்ததாக அவர்களிடம் கேட்டேன்” .
“அமாம் அமாம்” ஞானசாராவின் கோபம் தணிவதை அவதானிக்க முடிந்தது.
ஞானசாரவின் சிங்கள மொழி மூல பதில்களை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த விதானகே தொடர்ந்தும் என்னிடம் கருத்து தெரிவிக்கையில் “ இலங்கை ஒரு சிறிய நாடாகவும், ஏழை நாடாகவும் இருப்பதனாலேயே மேற்கத்தைய ஊடகங்கள் மற்றதும் வெளிநாட்டினர் எமக்கு தாக்குதல் தொடுக்கின்றனர் , உங்கள் நாட்டிற்கு வந்து உங்கள் நாட்டு பிரதமருடன் இது
போன்ற நேர்காணல்களில் ஈடுபட எங்களுக்கும் விருப்பம் உள்ளது தான், ஆனால் அதற்கான போதிய வசதி வாய்ப்புகள் எங்களிடம் இல்லை” என்று கூறினார் ,
மேலும் கருத்துக் கூறிய விதானகே, “ பௌத்த தர்மத்தை அழித்துவிடவும், பௌத்தர்களை அடிப்படைவாதிகளாக சித்தரிக்கவும் சர்வதேச ஊடகங்களுக்கு தனியானதொரு நிகழ்ச்சி நிரல் செயற்படுத்த படுகின்றது. உங்கள் பிரதமர் அவுஸ்திரேலியாவிலுள்ள அடிப்படைவாதிகளை பற்றி பேசும்போது எவரும் கேள்வி கேட்பதில்லை, எங்களுக்கு பண உதவிகள் செய்வீர்களானால் இதுபற்றி கூறலாம்.
இதற்கிடையில் கருத்துக் கூறிய ஞானசார “ நாங்கள் வெளிநாட்டு ஊடகங்களை நம்புவதில்லை. உங்களில் அநேகமானவர்கள், தனியானதொரு நிகழ்ச்சி நிரலை மறைத்துவைத்துக் கொண்டுதான் இங்கு வருகிறார்கள் . பி பி எஸ் சம்பந்தமாக பிழையான தகவல்களை உலகில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று தெரிவித்தார்.
சீன அரச ஊடகமான ஷிங்வாஹ் ( Xinhua ) அண்மையில் பி பி எஸ், சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இலங்கையில் ஹிஜாபை (புர்காவை) தடைசெய்ய இவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது,.
விதானகேயின் கூற்றுப்படி மேற்படி அறிக்கை பொய்யானதாகும். தடைசெய்யப் படவேண்டியது புர்காவை மாத்திரமல்ல, சில ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்துள்ள பொதுவாக முகத்தை மூடி அணியும் ஆடைகளை இங்கும் தடை செய்ய வேண்டும்,.
இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் முன் நீங்கள் (பி பி எஸ்) அடிக்கடி போராட்டங்களை நடத்துவது ஏன் என்று விதானகேயிடம் வினா தொடுத்தேன்.
“ பௌத்த உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளதால்.” என்று அவர் கூறினார்
“இது சம்பந்தமாக இந்தியாவுக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்” என்று கேட்டேன்.
கடந்த ஜூலை 7ம் திகதி பீகார் மாநிலத்தில் புத்த கயாவில் நடைபெற்ற குண்டு தாக்குதல்களை குறிப்பிட்டார். “ அது புத்தர் பிறந்த பூமி அதை பாதுகாக்கும் கடமை அவர்களுக்குள்ளது.” என்றும் விதானகே தெரிவித்தார்.
விதானகேயின் இந்த கூற்றில் ஒரு பிழையுள்ளது. புத்தர் பிறந்தது தற்போதைய நேபால் தேசத்தில் லும்பினி எனும் இடத்தில் என்பதை சிறு பிள்ளைகளும் அறிந்த விடயமாகும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் புத்தர் பிறந்த இடம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும் எவரும் அதை பீகார் மாநிலம் என்று எங்குமே குறிப்பிடவில்லை. இலங்கையில் புத்த தர்மத்தை பாதுகாப்போம் என்று கூறும் பி, பி, எஸ் இது பற்றி தெரியாதிருப்பது ஆச்சரியதிகுரிய விடயமாகும்.
தமிழ் மொழியை அரச கரும மொழியாக ஏற்றுக் கொள்ளபடுவதை பற்றி இவர்களிடம் கேட்டேன் , ஞானசார அதற்கு இவ்வாறு பதிலளிக்க முற்பட்டார். “ முதலில் வரலாற்றை தெரிந்திக்க வேண்டும்…… அவ்வாறல்லாமல் இதுபற்றி கேள்வி எழுப்ப முடியாது.”
விதானகேயும் பதிலளிப்பதில் சேர்ந்து கொண்டார். “ தமிழர்களுடன் எங்களுக்கு பிரச்சினை கிடையாது. எதிர் வரும் மாதம் பல பொதுக் கூட்டங்களை தமிழர் பகுதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளோம். தமிழர்கள் எங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.”
ஞானசார விடைபெற்றுச் செல்ல ஆயத்தமாகிறார். வெளிச் செல்லுமுன் விதானகேயிடம் சிங்களத்தில் பல அறிவுறுத்தல்களை வழங்குவது தெரிந்தது. நானும் விடைபெற ஆயத்தமான போது விதானகே என்னுடன் உரையாட ஆரம்பித்தார் ,
“ அவர் (ஞானசார) பகுடியாகவே “எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள்” என்று கூறினார். எங்களுக்கு முஸ்லிம்களுடன் எந்தப் பிரச்சினையும் கிடையாது ’’,என்று விதானகே தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாடிய விதானகே, “எல்லா முஸ்லிம்களும் கெட்டவர்கள்” என்று ஞானசார கூறியதன் தவரை என்மீது சுமத்தினார். என்மீது சுமத்தப் பட்ட குற்றசாட்டு யாதெனில் “ நான் ஒரு மேற்குலக ஊடகவியலாளராக இருந்து கொண்டு மேற்படி விடத்தை (முஸ்லிம்கள் பற்றிய விடயத்தை) பற்றி ஞானசாரவிடம் கேள்வி கேட்டதே நான் செய்த குற்றமாகும் என்று கூற முற்பட்டார்.
“ஆசியாவின் ஆச்சர்யமிகு நாடாக ஆவதற்கு முன் இலங்கை இன்னும் மிக நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்”

0 கருத்துகள்: