அரசியல்
அமைப்பின் 17ஆம், 18ஆம் திருத்தங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதரவு தெரிவித்ததன் மூலம் மகிந்த ராஜபக்ஷவை இலங்கையின் ஆயுட்காலத்
தலைவராக்கி விட்டது என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் கண்டி மாவட்ட
ஐ.தே.க வேட்பாளருமான அசாத் சாலி தெரிவித்தார்.
கண்டி மாவட்ட மடவளை சந்தியில் நடைபெற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் பாராளுமன்றத்தில் தேவைப்படுகின்ற போது அதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியதன் மூலம் இன்று நாட்டில் நடக்கு அராஜக நிலைக்கு அவர்கள் துணை போய்விட்டார்கள்.
இலங்கை வரலாற்றின் ஜே. ஆர். ஜயவர்தன, ஆர்.பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதிகளாக இரண்டு தடவை மட்டுமே ஆட்சியில் இருந்தனர். ஆனால் தற்போது ஆயுள் முழுவதும் இருக்க முடியும். அதுமட்டுமல்ல அதற்குத் தேவையான அனைத்து பின்னணியையும் அரசியல் அமைப்பின் 17ஆம், 18ஆம் திருத்தங்கள் வழங்கியுள்ளன. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் துணை போனது.
அது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிபந்தனை அற்ற வகையில் தமிழ் கூட்டமைப்புடன் சேர்ந்து முதலமைச்சுப் பதவியைப் பெறக் கிடைத்த அரிய வாய்ப்பை தவற விட்டு வரலாற்றுத் தவறையும் அது இழைத்துள்ளது.
தற்போது விழுத்த முடியாது என்று சொல்கின்ற ஆட்சியை ஆட்டம் காண கிழக்கு மாகாண சபையிலிருந்து ஆரம்பித்திருக்க முடியும். இவ்வாறு முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்த கட்சியை நம்ப வேண்டாம்.
இத்தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றப் போகின்றீர்களா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆம் அதனையும் செய்ய முடியும் டி.பி.விஜேதுங்க ஜனாதிபதியாக இருக்கும் போது என்ன நடந்தது?. தென் மாகாணம் அதனை அடுத்து மேல் மாகாணம் அதைத் தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல் அதனை அடுத்து ஜனாதிபதித் தேர்தல் என்று சிறிய காலப்பகுதில் சந்திரிகா அம்மையார் வெற்றி பெறவில்லையா? இது தென் மாகாண சபைத் தேர்தலில் இருந்து ஆரம்பிக்க வில்லையா? அது போல் ஏன் இதனையும் மத்திய, வடமேல், வடக்கு மாகாண சபைத் தேர்தல்களில் இருந்து ஆரம்பிக்க முடியும்.
தற்போது புதிதாக இரு அங்கத்தவர்கள் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்குள் உள் வாங்கப்பட்டுள்ளனர். ஒருவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றவர் பொதுபலசேனாவின் செயலாளர்.
நடைபெறப் போகும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் அளிக்கும் வாக்குகள் வெறும் வாக்குகள் அல்ல. அவை அனைத்தும் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவிற்கும் ஹிஜாபிற்கும் வழங்கும் அங்கீகாரம் என்பதை மறந்து விடவேண்டாம் எனவும் கூறினார்.

0 கருத்துகள்: