mohameh shiyam
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கோடீஸ்வரரான மொஹமட் சியாம் படுகொலை தொடர்பிலான
இரகசியம் டீ.என்.ஏ பரிசோதனையின் மூலமாக அம்பலமாகியுள்ளது என்று ரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

மொஹமட் சியாமை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வானிலிருந்த இரத்தக்கறை அவருடையது என்று டீ.என்.ஏ பரிசோதனையின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரகசிய பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவான் மொஹமட் சஹாப்தீனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொண்ட ஜின்டெக் நிறுவனத்தின் பரிசோதனை அறிக்கையின் பிரதியும் இணைக்கப்பட்டே நீதிமன்றத்திற்கு எழுத்துமூலமான அறிகை ரகசிய பொலிஸாரினால் கையளிக்கப்பட்டது.

கொழும்பு மேலதிக நீதவானிடமே இந்த எழுத்துமூல அறிக்கை ரகசிய பொலிஸ் பிரிவின் பிரதி பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகரவினால் நேற்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு அவர் கொண்டுவந்தார்.

இந்தவழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் டீ.என்.ஏ பரிசோதனை அறிக்கையை கையளித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகனுக்கு பாதுகாப்பு வழங்கினார் என்ற  திமுத்து ஸ்ரீமால் ஹெட்டியாராச்சி தவிரை ஏனைய ஏழு சந்தேகநபர்களும் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்;தப்பட்டிருந்தனர்.

திமுத்து ஸ்ரீமால் ஹெட்டியாராச்சி காலி நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்த ப்படவேண்டி இருந்தமையினால் அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்படவில்லை.

முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இந்த சம்பவம் தொடர்பில் 18 பேரிடம் ரகசிய பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டிருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts