பொதுவாக கார்ட்டூன்கள், குழந்தைகள் விரும்பிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு சாதனம் என்பதையும் தாண்டி அதன் மூலமும் பல சமூக மாற்றங்களுக்கு அடி கோள முடியும் என்பதற்கு உதாரணங்கள் பல. அந்த வகையில் சமீபத்தில் பாகிஸ்தானில் சுட்டீச்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட கார்ட்டூன் தொடரான ‘புர்கா அவெஞ்சர்’ ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் திரும்பி, விரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

பாகிஸ்தானில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக விரைவில் மற்ற மொழிகளிலும் பேச வருகிறாளாம் இந்த புர்கா அவெஞ்சர்.

பாகிஸ்தானில் உள்ள ‘ஜியோ தேஜ்’ என்ற சனலில் ஒளிபரப்பாகிய தொடர் தான் இந்த ‘புர்கா அவெஞ்சர்’. முதலில் குறுந்தொடராக ஆரம்பிக்கப்பட்ட இது, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு காரணமாக ‘சீரியல்’ மாதிரி நெடுந்தொடராக மாறப் போகிறது.

இத்தொடரின் இயக்குநர் பிரபல பாடகர் ஹாரூன் ரஷீத். தயாரிப்பாளரும் அவரே தான்.

பகலில் சாதாரண டீச்சராகவும், இரவில் கெட்டவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோயினாகவும் மாறும் ஜியா என்ற பெண்ணைப் பற்றியது தான் கதை. இரவு அவதாரமான சூப்பர் ஹீரோயின் பெயர் தான் புர்கா அவெஞ்சர்.

பெண் கல்விக்கு எதிராக போராட்டி, பாகிஸ்தானிய பழமைவாதிகளை தண்டிக்கும் வேலை தான் புர்கா அவெஞ்சருடையது.

இக்கதையின் கரு, பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடி தாலிபன்களால் தாக்கப்பட்டாலே சிறுமி மலாலா, அவளைத் தழுவி எடுக்கப் பட்டது தான்.

வெறும் 12 சதவீத பெண் கல்வியறிவு கொண்ட பாகிஸ்தானில் இந்தத் தொடர் ஹிட்டடித்தது பாகிஸ்தானின் எதிர்காலத்திற்கு நல்ல அறிகுறியாகவேப் படுகிறது.

வடக்கு மற்றும் மேற்குப் பாகிஸ்தானில் பெண்களை பள்ளி அருகேயே போக விடாமல் தொடர்ந்து தாலிபன்கள் தொல்லை கொடுத்து வரும் நிலையில், இப்படி ஒரு தொடர் வெளியானது அனைவரையுமே அசைத்துப் பார்த்துள்ளது என்கின்றன சர்வதேச மீடியாக்கள்.

இத்தொடர் குறித்து ஹாரூன் கூறுகையில், ‘சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளையும் மூடப்பழக்க வழக்கங்களையும் அடித்துத் துவைத்து பிஞ்சுகளின் மனதில் நல்ல செய்திகளைப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த புர்கா அவெஞ்சர் பாத்திரத்தை உருவாக்கினேன்.

மலாலா தான் என் கதையின் ரோல் மாடல். எத்தனையோ கொலை மிரட்டல்களுக்கு நடுவே பாகிஸ்தான் மக்கள் இந்தத் தொடரை விரிவு படுத்த வேண்டிக் கடிதங்கள் மற்றும் போன் வாயிலாக வேண்டுகோள் வைப்பதால் புர்கா அவெஞ்சரை என் உயிர் உள்ளவரை தொடர உத்தேசித்துள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிய சோஷியல் மீடியாக்களில் சூடான் விவாதப் பொருளாகி விட்ட ‘புர்கா அவெஞ்சர்’ டிவி மூலம் ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டு விட்டாள்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts