சவூதியைச்
சேர்ந்தவர் என நினைத்து நபரொருவரை திருமணம் செய்து கொண்ட சவூதி
பெண்ணொருவர் தனது கணவர் எமன் நாட்டைச் சேர்ந்தவரென 18 வருடங்களின் பின்னர்
கண்டுபிடித்துள்ளார்.
18 வருடங்களுக்கு முன்னர் குறித்த நபர் தனது
திருமணத்திற்கான விருப்பத்தினைத் தெரிவித்து தான் சவூதி நாட்டை சேர்ந்தவர்
என்பதை நிரூபிப்பதற்கான போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
அவற்றை உண்மை என நம்பிய அந்தப் பெண் அவரை தனது கணவனாக ஏற்றுக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது இரண்டு மகன்களும் ஒரு மகளும் இரண்டாம் நிலை பாடசாலைக்கு
சென்றபோது அவர்கள் தமது தந்தையின் அடயாள அட்டை இலக்கத்தை குறிப்பிடும்படி
கேட்கப்பட்டனர்.
“அப்போதுதான் நான் 18 வருடங்கள் மனைவியாக வாழ்ந்த அந்த மனிதன் சவூதியைச் சேர்ந்தவர் அல்ல என கண்டறிந்தேன்.
அவன் என்னை திருமணம் செய்தபோது போலி அடயாள அட்டையினை
பயன்படுத்தியிருக்கிறான் எனவும் கண்டறிந்தேன். அவனைப்பற்றி நான் அறிந்து
கொண்டதும் வீட்டிலிருந்து அவன் தப்பியோடிவிட்டான்” என அப் பெண்
தெரிவித்தார்.
0 கருத்துகள்: