கடந்த
2008 மே 13ல் ஜெய்பூரில் குண்டுவெடித்ததை தொடர்ந்து "இன்ஃபோசிஸ்"
நிறுவனத்தில் "சீனியர் நெட்வொர்க் இன்ஜீனியராக" பணியாற்றி வந்த "ராஷித்
ஹுசைன்" சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். 10 நாள்
விசாரணைக்குப்பின் அவர் "நிரபராதி" என விடுவிக்கப்பட்டார்.
அதிகாரப்பூர்வமாக அவர் கைது செய்யப்படவுமில்லை, அவர் மீது வழக்கு எதுவும்
பதிவு செய்யப்படவுமில்லை. இந்நிலையில், தீவிரவாத வழக்கில் விசாரிக்கப்பட்ட
ஒரே காரணத்துக்காக "இன்ஃபோசிஸ் நிறுவனம்" இஞ்சீனியர் ராஷித் ஹுசைனை பனி
நீக்கம் செய்துவிட்டது. இன்போசிஸ் நிறுவனத்தை எதிர்த்து "தொழிலாளர்
நீதிமன்றத்தில்" வழக்கு தொடர்ந்தார்,இஞ்சீனியர் ராஷித் ஹுசைன். 3 ஆண்டுகள்
விசாரனைக்குப்பிறகு தொழிலாளர் நீதிமன்றம், ராஷித் ஹுசைனை மீண்டும்
பணியிலமர்த்த மார்ச் 2011ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஏப்ரல் 2011ல்
"ராஜஸ்தான் ஹைகோர்ட்"டுக்கு சென்றது, இன்போசிஸ் நிறுவனம். 20 மாத
விசாரணைக்குப்பின் ராஜஸ்தான் ஹைகோர்ட்டிலும் ராஷிதுக்கு ஆதராவகவே தீர்ப்பு
வந்துள்ளது. இதையடுத்து, ராஷித் ஹுசைனுக்கு ரூ 20 லட்சம் நஷ்ட ஈடாக வழங்கிட
நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது,இன்ஃபோசிஸ். இதையடுத்து, ராஜஸ்தான்
உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து விட்டதாக அறிவித்துவிட்டது. ஜமாத்தே
இஸ்லாமி மற்றும் ராஜஸ்தான் முஸ்லிம் ஃபோரம் ஆகிய இரு அமைப்புக்களும்
சேர்ந்து, அப்பாவி ராஷிதுக்கு ஆதரவாக வழக்கு நடத்தி நிவாரணம்
பெற்றுக்கொடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: