
இலங்கை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் கோரிக்கை
விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 22ம் அமர்வுகளில்
கலந்து கொண்டு உரையாற்றிய கனேடிய பிரதிநிதி இதனைக்
குறிப்பிட்டுள்ளார்.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப்
பரிந்துரைகளை கால தாமதமின்றி அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவர்
தெரிவித்துள்ளார்.
தேசிய செயற் திட்டத்தின் அடிப்படையில்
பரிந்துரைகள் அமுல்படுத்தப்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.பொதுநலவாய
நாடுகள் தலைவர்கள் மாநாட்டை நடாத்தும் நாடு என்ற ரீதியில் இலங்கை பொதுநலவாய
நாடுகள் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்
செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் இடம்பெற்றதாக குற்றம்
சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள்
தொடர்பில் சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதும் நம்பகமானதுமான விசாரணைகளை
நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: