அரபு நாடுகளில் இல்லாத மத சுதந்திரம் இலங்கையில் உள்ளது. அந்த
நாடுகளில் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன்
சுதந்திரமாக கருத்துக்களையும் கூற முடியாது என்று கிழக்கு மாகாண
முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் கூறினார்.
'இந்நாட்டில் வாழுகின்ற
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை அவர்களுடன்
கலந்து பேசி உரிய தீர்வைக் கொடுக்க நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம்" என
ஜனாதிபதி என்னிடம் தெரிவித்ததை நான் பூரணமாக நம்புகின்றேன் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: