அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு சட்டரீதியாக ஹலால் சான்றிதழ் வழங்கும் உரிமை இல்லை ஆனால்
முஸ்லிம் மக்களுக்கு ஹலால் உணவை உட்கொள்ளும் உரிமை உள்ளது என அமைச்சரவை உப
குழு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் ஒப்படைக்கும்படியான ஆலோசனையை இக்குழு முன் வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அரசாங்கம் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும் என ஜம் இயத்துல் உலமா பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்துக் கேட்ட போதும் அரச பேச்சாளர் கெஹலிய அது முடியாத காரியம் என மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்க அதே வேளை, இவ்வாலோசனை முன் வைக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் நலன் கருதியும் முஸ்லிம் மக்கள் மீது அரசு வைத்திருக்கும் அக்கறையின் பொருட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கலை அரசாங்கம் பொறுப்பேற்கலாம்.
அப்படிப் பொறுப்பேற்பதன் மூலம் அரசியல் ரீதியாக அரசாங்கம் குறித்த எண்ண மாற்றங்களுக்கு வழி வகுக்கலாம் என்பது அரசியல் கணக்காக இருக்க, ஜம் இயத்துல் உலமா தேவையின்றி இவ்விடயத்திற்குள் அகப்பட்டுக்கொண்ட நிலையே ஏற்படும்.
இதே வேளை கடந்த 2007ம் ஆண்டு வர்த்தமானியில் அகில இலங்கை ஜம் இயத்துல் உலமாவுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டதாகவும் பின்னர் 2008ம் ஆண்டு அது மீளப்பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் ஜம் இயத்துல் உலமாவை ஒதுங்கிக்கொள்ளும் படி வேண்டுகோள் முன்வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: