இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள்அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள்இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான்மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..?எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.

பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம்அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பைசேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!

அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பைவிட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?

உடனடியாக ரூம்போட்டு அதிதீவிர சிந்தனையில் யோசித்த அவர்களின் மூலையில் உதித்தது ஓர் உபாயம்..! அதாவது, இனி... எந்தெந்த மூலப்பொருட்களையெல்லாம் உணவுப்பொருட்களின் உறைமீது எழுதினால் பிரச்சினை/எதிர்ப்பு வருமோ அதையெல்லாம் பெயராக எழுதாமல்... சங்கேத வார்த்தைகளாகஎழுதுவது என்று..!

அந்த ஐடியாதான்... (E codes) ஈ கோடுகள்...! இதில் 'E' என்பது Europe..! 'ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் மண்டையில் உதித்த கள்ளத்தனம்' என்பதை பேட்டன்ட் போட்டு பெருமையாக பறைசாற்றிக்கொள்கிறார்கள்..! வெட்கக்கேடு..! வேதனை..!

தற்போது சர்வதேச அளவில் பொருட்கள் சந்தைபடுத்தப்பட்ட நிலையில் நீங்கள் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் பல பாக்கெட்/பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுப்பொருளை ஒவ்வொன்றாக எடுத்துப்பாருங்களேன் சகோ..! அதில், ingredients என்ற பகுதியில், E-210, E473, E-904 என்று இப்படி சில ஈ கோட்ஸ் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அவையெல்லாம் என்ன என்று எப்போதேனும் சிந்தித்ததுண்டாசகோ..?

E 100-199 food colorsE 200-299 preservativesE 300-399 antioxidants, acidity regulators, phosphates, and complexing agentsE 400-499 thickeners, stabilizers, gelling agents, phosphates, humectants, emulsifiersE 500-599 acidity regulators, anti-caking agents, salts and relatedcompoundsE 600-699 flavor enhancersE 700-899 antibiotics, not used for food additives (used for feed additives)E 900-999 surface coating agents, gases, sweetenersE1000-1399 miscellaneous additiveE 1400-1499 starch derivative, additional chemicals

---இப்படியாக இவற்றில் பல வகை உண்டு. இதில் எதெல்லாம் சாப்பிடக்கூடாத ஹராம்... எதெல்லாம் சாப்பிடத்தகுந்தஹலால் என்று பயனாளருக்கு எப்படிதெரியும்...?மேற்கண்ட பட்டியளில்,பன்றிக்கொழுப்பும் உண்டு. இது ஹராம் (Haram) என்று சுட்டப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாது, ஆடு/மாடு போன்ற பல்வேறு கால்நடைகளின் கொழுப்பும் உண்டு. இவை 'ஹராமான முறையில் தலைவேறு உடல்வேறு என வெட்டப்பட்டனவா' அல்லது 'ஹலாலான முறையில் தக்பீர் கூறி இரத்தம் ஓட அறுக்கப்பட்டனவா' என்பது தெரியாது. அப்படி என்றால் 'ஐயத்திற்கு இடமுள்ளது' அதாவது Mushbooh எனத்தரப்பட்டிருக்கிறது.

சில அயிட்டங்கள் விலங்கின் மூலமின்றி தாவர மூலப்பொருள் ஆகவும் இருக்கலாம். அவை Depends என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவைமட்டுமின்றி,வேறுசில போதையூட்டும் ஆல்கஹால் அயிட்டங்களும், இன்னபிற உடலுக்கு கேடுசெய்யும் ரசாயணங்களும், கொடிய விஷப்பூச்சிகளிலிருந்து பெறப்படும் பொருட்களும், பலத்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு ஹராம் Haram அல்லது Mushbooh என்று சுட்டப்படுள்ளன.

இவை அல்லாத பெரும்பாலான ஏனையவை ஹலால் Halal என்றும் சுட்டப்படுள்ளன.

ஹராம் மற்றும் சந்தேகத்துக்கு இடமானவை இரண்டையும் ஒன்றிணைத்து தொகுத்த ஒரு கையடக்க அல்லது சூப்பர்மார்க்கெட்டில் உடனே எடுத்து பயன்படுத்தத்தக்க மணிப்பர்ஸ் அடக்க அட்டவணை கீழே..!

ஆகவே, பெயரை சொல்லாமல் இப்படி வெறும் சங்கேத குறியீட்டு எண்களை கொண்டு E-Codes என்று எழுதி நம்மை இளிச்சவாயர்களாக்கி பணம் பார்க்கும் பன்னாட்டு ஏகபோக வணிக நிறுவனங்கள்....

'தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவைஉங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்கு கள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்திவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல்,வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்;நிகரற்ற அன்புடையோன்'. (அல் குர்ஆன் 5 : 3)

'உமக்கு திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றவேண்டாம்' (அல்குர்ஆன் 17:36)'

"உனக்கு சந்தேகமானவற்றை விட்டுவிடு, உனக்கு சந்தேகமற்ற உறுதியான விஷயங்களின் பால் சென்றுவிடு" என நபி (ஸல்...) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

Courtesy : Sources & ReferencesDr. M. Amjad Khan, Medical Research Institute, United States.Dr M Liaqat (PhD Food Biochemistry), MA CONSULTING, UK.

http://www.deccainfo.com/why-pig-fat-is-not-mentioned-but-codes-are-printed.html

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts