ஹலால் சர்ச்சை இன்னும் முடியவில்லை என ஜாதிக ஹெல உருமய இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
அத்துடன் அகில இலங்கை உலமா ஜம்இய்யதுல் உலமா மற்றும் இலங்கை வர்த்தக
சம்மேளனம் ஆகியன ஹலால் இலச்சினையை அகற்றுவதில்லை என தீர்மானித்திருப்பது
மக்களை ஏமாற்றும் முயற்சியாகும் என ஜாதிக ஹெல உருமயவின் பொது செயலாளரும்
அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஹலால் விடயம் அல்குர்ஆனில் சட்டமாக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் அகில இலங்கை உலமா ஜம்இய்யதுல் உலமாவுடன் விவாதம் நடத்த தயார் எனவும் அவர் சவால் விடுத்தார்.
அத்துடன் ஹலால் பொருட்களையும் தரப்படுத்தலையும் சான்றிதழையும் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஹலால் விடயத்தை முன்கொண்டுவந்தமைக்காக பொது பல சேன அமைப்பிற்கு பொதுமக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க தெரிவித்தார்.
அதிதீவிரவாதிகள் எனப்படுவோர் தான் எப்போதும் சமூகத்தை முன்கொண்டு செல்பவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: