எனக்கு ஹலால் தேவை. நான் காலம் காலமாக ஹலால் உணவுகளையே உண்கிறேன். உடம்புக்கு தீங்கு விளைவிக்கும் எதுவும் ஹலால்
உணவில் சேர்ப்பதில்லை. இதையே நீங்களும் விரும்பினால் உண்ணலாம் என கிராமிய
அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.
நேற்று மாவனல்லை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஹலால் என்பது ஆகுமாக்கப்பட்டதாகும். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் உடம்புக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஏதும் கலக்கப்பட்டிருந்தால் அவற்றை தவிர்ந்து கொள்வதே எமக்கு சிறந்ததாகும். காலம் காலமாக நாம் இதனையே உட்கொண்டு வருகிறோம். இந்த ஹலால் விவகாரத்தினால் எமக்கு மத்தியில் பிளவுகள் வருவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நீங்கள் இந்த பிளவுகளில் பங்கெடுக்காது ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: