இன்று பல நூற்றாண்டு காலமாக சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவி வந்த மிக நெருக்கமான உறவை சீர் குலைப்பதில் சில சக்திகள்
ஈடுபட்டு வருவது மிகக் கவலைக்குரிய விடயமாகும். இந்த தீய முயற்சியில்
வங்குரோத்துக்குள்ளாக்கப்பட்ட சிலர் ஈடுபட்டாலும் இந்த நாட்டின் முக்கியமான
பௌத்த மதத்தலைவர்கள் இடமளிக்க மாட்டார்கள் என்று இலங்கையில் மிகவும்
பிரபல்யமான பெல்பொல விபஸ்சி அமைப்பின் தலைவர் பெல்பொல விபஸ்சி தேரர்
தெரிவித்தார்.
இலங்கையில் மிகவும் பிரபல்யமான பெல்பொல விபஸ்சி அமைப்பின் தலைவர் பெல்பொல விபஸ்சி தேரரைச் சந்திப்பதற்காக பொரல்ல ஸ்ரீ சுதர்ணாராராமய விஹாரைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என். எம். அமீன் தலைமையில் முஸ்லிம் தூதுக்குழுவொன்று சென்று இருந்தனர். இந்தச் சந்திப்பில் குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தாரும் கலந்து கொண்டார்.
சமீப காலமாக நாட்டில் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள இனவாதப் பிரச்சினை சம்மந்தமாகவும் நீண்ட காலமாக இருந்து வரும் சிங்கள முஸ்லிம் மக்களின் நல்லெண்ண உறவுகள் பாதிக்கப்பட்டு வரும் நிலை தொடர்பாகவும்
கருத்துப் பரிமாறிக் கொள்ளும் நோக்கத்துடயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பினை வெல்பொல விபஸ்சி அமைப்பின் நீண்ட காலப் பணிப்பாளரான அப்துல்லா ஏற்பாடு செய்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது பெல்பொல விபஸ்சி தேரர் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், புத்தபிரானின் போதனையில் உயிர் சம்மந்தமாகக் கூறுகையில் அனைத்து ஜீவராசிகளும் நலன்பேண வேண்டும் என்று கூறிய கருத்து புத்தபிரான் பௌத்தர்களுக்கு மட்டுமல்ல முழு ஜீவராசிகளுக்கும் நலனாகவே போதனை செய்தார். இன்று இந்த நாட்டின் பௌத்த பிக்குகள் சொல்வது போல் பௌத்தர்களுக்கு மட்டும் புத்தபிரானின் போதனைகள் அமையவில்லை. எங்களுக்கு நன்கு புலப்படக் கூடிய நிகழ்வுகள் உள்ளன. பௌத்தர்களின் விசேட நினைவு கூறப்படும் அன்னதான விசாக் நிகழ்வுகளின் போது அல்லது தோரணங்களின் போது மொஹிதீன் பேக் அவர்களினால் பாடப்படும் புத்தம் சரணம் கச்சாமி என்ற பாடலே போதும் ஒரு சாதாரண முஸ்லிம் சிங்கள ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு என்று கூறுவதற்கு. நாங்கள் யாராக இருந்தாலும் எங்கள் எல்லோரினது உடம்பிலும் ஓடுவது ஒரே இரத்தமாகும். சிங்கள பௌத்த என்று ஒரு இனம் இல்லை. பாலி மொழியில்தான் புத்தபிரானின் மொழியாக இருந்தது. ஆதனால் தேவையில்லாத பிரச்சினைகளை தூண்டுதற்கோ இந்த நாட்டின் அமைதியை சீர்குலைப்பதற்கோ நாங்கள் இடமளிக்க மாட்டோம். முஸ்லிம்கள் இந்தப் பிரச்சினையைப் பெரிது படுத்தாது இருப்பது முக்கிய கடமையாகும்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முஸ்லிம் கவுன்சில் தூதுக் குழுவினருக்கு மஃரிப் தொழுகைக்கான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இங்கு தொழுகை நடைபெற்றது.

0 கருத்துகள்: