
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள்
சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமரிக்க தீர்மானத்தின் இறுதி வரைபை
முடிவாக்கும் கலந்துரையாடல் இன்று ஜனீவாவில் ஐரோப்பிய நேரம் 4 மணியில்
இருந்து 6 மணிவரை இடம்பெற உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட
செய்தியாளர் ஜனீவாவில் இருந்து தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் சபையில் அங்கம் வகிக்கும்
நாடுகள், மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனப்
பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்த இறுதி வரைபு குறித்த அமர்வில்
கலந்துகொள்ளத் தயாராகி உள்ளனர்.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள
அமரிக்காவின் தீர்மானத்தின் இறுதி வரைபை உருவாக்கும் போது ஏற்கனவே
பிரயோகிக்கப்பட்ட வசனங்களில் மாற்றங்களை கொண்டுவர இரு;பதாக தகவல்கள்
கிடைத்துள்ளனன.
அனேகமான நாடுகளின் ஆதரவைப் பெறும்
நோக்குடனும், இலங்கை அரசாங்கம் அமரிக்காவுடன் பின்கதவால் மேற்கொண்டு வரும்
சமரச முயற்சியின் விளைவாகவும் ஏற்கனவே உள்ள வரைபில் காணப்படும் கடினமான
சொற்பிரயோகங்களில் மென்மைத் தன்மையை பிரயோகிப்பதற்கான வாய்ப்புக்கள்
அதிகரித்திருப்பதாக ஜனீவாவில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட
செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை இறுதியாக்கப்படும்
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நாளை (14.03.13) ஐக்கியநாடுகள் சபையின்
மனிதஉரிமைக் கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக
எதிர்பார்க்கப்படுகிறது.
நளை சமர்ப்பிக்கப்படவுள்ள
தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ள
நிலையில் பெரும்பாலான ஆபிரிக்க, லத்தின் அமரிக்க நாடுகளும், மனித உரிமைக்
கவுன்சிலில் அங்கம் வகிக்கும் மேலைத்தேய நாடுகளும், அமரிக்க சார்புடைய வட
அமரிக்க தென்னமரிக்க நாடுகளும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக
தெரியவருகிறது.
எனினும் இலங்கையில் வெளிக்கிழம்பியுள்ள
முஸ்லீம்களுக்கு எதிரான சிங்கள பொத்த தேசியவாத சக்திகளின் எதிர்
நடவடிக்கைகளால் இஸ்லாமிய நாடுகள் பல வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத சூழல்
கானப்படுவதாக கூறப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் அமைப்பின்
உறுப்பு நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் இலங்கைக்கு எதிரான யோசனை
ஐக்கிய நாடுகளின் அடிப்படை இணக்கப்பாடுகளுக்கு முரணானது என ஜெனிவாவுக்கான
இலங்கையின் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையானது முழுமையான
முன்னுதாரணமாக இருக்கலாம் எனவும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு குறுகிய
மற்றும் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்
கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணைக்குழுவில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனை தொடர்பாக
உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தை ஒன்றை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும்
நபடுகள் மற்றும் தரப்புகளினால் இலங்கை தொடர்பிலான அக்கறை தொடர்பில் இந்த
பேச்சுவார்த்தையில் தான் கலந்து கொண்டதாகவும் எனினும் அங்கு நடைபெற்ற
முறைமையானது அடிப்படைகளுக்கு எதிரான அரசியல் செயற்பாடு எனவும் தூதுவர்
குறிப்பிட்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு அமெரிக்காவினால்
முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பாக அதன் தூதுவர் தனது பணிகளை
மீறி பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.
0 கருத்துகள்: