அநுராதபுரத்தில் அல் கைதாவுடன் தொடர்பான பயிற்சி வழங்கப் படுவதாகவும் அநுராதபுரம் பெரிய பள்ளி மற்றுமொரு ஜூம்ஆ மஸ்ஜித் தவிர்ந்த
ஏனைய மஸ் ஜிதுக்களில் அல் கைதாவுடன் தொடர்பான பயிற்சி வழங்கப் படுவதாகவும்
அவற்றை தடைசெய்யுமாரு பொது பல சேனாவுக்கு அநுராதபுரம் பெரிய பள்ளி
நிர்வாகம் அதன் உத்தியோகபூர்வ ஆவணம் Letterhead மூலமாக
கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான தகவலை பொது பல சேனா
வெளியிட்டுள்ளதாகவும் வெளியான செய்தியை அநுராதபுரம் பெரிய பள்ளி
நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் பௌசி மறுத்தார் .
இது தொடர்பில் எமக்கு அவர் வழங்கிய தகவலில் தமது மஸ்ஜித்தின் Letterhead பிரதி ஒன்று எடுக்கப்பட்டு அது தவறான நோக்குடன் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும் அதற்கும் மஸ்ஜித்தின் நிர்வாகத்துக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்றும் , குறித்த விடயம் தொடர்பில் வக்பு சபை தம்மிடம் விளக்கம் கோரியதாகவும். கடந்த 7 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைத்ததாகவும் எனினும் நேரில் செல்ல முடியவில்லை அது தொடர்பில் வக்பு சபைக்கு கடிதம் எழுதியுள்ளேன் அது தொடர்பில் வக்பு சபைக்கு எழுத்துமூலம் உண்மைநிலையை விளக்கியுள்ளேன் என நிர்வாகத் தலைவர் அல்ஹாஜ் பௌசி தெரிவித்தார் ,
மேலும் அவர் தெரிவிக்கையில் , கடந்த 6 ஆம் திகதி பொது பல சேனாவின் அலுவலகத்துக்கு நான் நேரில் சென்று அந்த அமைப்பின் செயலாளர் விமல ஜோதி தேரர் மற்றும் அதன் பிரமுகர்களை சந்திந்து நாம் அவர்களுக்கு எழுதியது போன்றும் அவர்களின் தலைமையகத்திலிருந்து மீண்டும் அது வெளியிடப்பட்டது போன்றும் இருக்கும் குறித்த ஆவணம் தொடர்பாக விசாரித்தேன் அதன் மூலமும் அது போலியானது என்பதை விளங்கிகொண்டேன் . மேலும் அவர்களிடம் எமது மஸ்ஜித்தின் பெயரில் போலியாக இது தயார் செய்யப்பட்டு எனது கையப்பமும் போலியான முறையில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்று தெரிவித்தேன். இந்த சதியின் பின்னால் உள்ளவர்கள் தொடர்பில் நாம் தேடிக்கொண்டு இருக்கிறோம் .
இது தொடர்பாக கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம் மற்றும் இது தொடர்பில் விரைவில் ஊடக அறிக்கை ஒன்றையும் வெளியிடுவோம். எனக்கும் ,அநுராதபுரம் பெரிய பள்ளி நிர்வாகத்துக்கும் இந்த சம்பவத்துக்குமிடையில் எந்தவித தொடர்பும் இல்லை. என்றும் அவர் மேலும் மறுத்தார் .

0 கருத்துகள்: