
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும்
நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் தொடர்ந்தும் கேள்வி எழுப்பப்படும்
பிரித்தானியா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல்,
வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம்
போன்ற விடயங்கள் குறித்து தொடர்ந்தும் பிரித்தானியா வலியுறுத்தும் என
குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கம்
மற்றும் புனரமைப்பு நடவடிக்ககைள் குறித்து இலங்கை அரசாங்கம் கனிசமானளவு
சவால்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் எவ்வாறான பிரதிநிதித்துவத்தை
செய்வதென்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என
பிரி;த்தானியாவின் சால்டாரி நகரப் பிரபு வெலாஸ் தெரிவித்துள்ளார்.
நிலக்கண்ணி வெடி அகற்றுதல் அபிவிருத்தி
சிறுவர் போராளிகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இதனை பார்வையிட்டதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை பெரும் அதிருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: