கடந்த
3 ஆண்டுகளாக "அமைதி" நிலவி வந்த காஷ்மீரில், அப்சல் குருவை, அவசரகதியில்
தூக்கிலடப்பட்டதையடுத்து மீண்டும் காஷ்மீரில் பதட்டம் நிலவி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின் இன்றுவரை, ராணுவத்துக்கு எதிராக எவ்வித
தாக்குதலும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்சல் குருவுக்கு
கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள் கிடைக்கவில்லை. வழக்கு விசாரணையின்
போது, இவர் கேட்ட வக்கீலை அரசு அமர்த்தித்தர வில்லை. மாறாக அரசுக்கு
இணக்கமான ஒரு வழக்கறிஞரை அமர்த்தினார்கள். இந்த முதல் கோணல்தான் முற்றிலும்
கோணலாகி அவரது உயிர் பறிக்கப்பட்டு விட்டது.
அப்சல் குருவுக்கு
முன்னால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில்
போடவில்லை. முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன்,
சாந்தன், முருகன் ஆகியோர் இன்றுவரை தூக்கிலிடப்படவில்லை. காலிஸ்தான்
பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை. அப்சல்
குருவுக்கு முன்னால் 90பேரின் தூக்குத் தண்டனையை உச்ச
நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவர்களையெல்லாம் தூக்கில் போட்டு விட்டு
அப்சல் குருவையும் தூக்கில் போட்டிருந்தால் நிலைமை இந்தளவிற்கு
சென்றிருக்காது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எல்லா கருணை மனுக்களையும்
ஒதுக்கி வைத்து விட்டு, காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் மக்பூல் பட்,
அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் மனுக்களை மட்டும் நிராகரித்து
"பாரபட்சமாக" நடந்துக்கொண்டதை காஷ்மீர் மக்களால் பொறுத்துக்கொள்ள
முடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமும், சிறைத் துறையும் கொலை
குற்றவாளிகளை வரிசைப்படுத்தி தூக்கில் போடாமல், முஸ்லிம்களை மட்டும் "குறி
வைத்து" தூக்கில் போட்ட வரலாறை முஸ்லிம்கள் எவரும் மறப்பதற்கில்லை. அப்சல்
குருவை ‘திடுதிப்’ என்று தூக்கில் போட்டுவிட்டு, காஷ்மீரில் ஊரடங்கு
உத்தரவு அமுல்படுத்தப்பட்டு, தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு
சேவைகள் அனைத்தையும் முடக்கிவிட்டு அப்போதைக்கு பிரச்சினைகளை அமுக்கியது
மத்திய அரசு. ஆனால், அப்சல் குரு விவகாரம் நீறு பூத்த நெருப்பாக,
காஷ்மீரில் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது.
கடந்த
3 ஆண்டுகளாக "அமைதி" நிலவி வந்த காஷ்மீரில், அப்சல் குருவை, அவசரகதியில்
தூக்கிலடப்பட்டதையடுத்து மீண்டும் காஷ்மீரில் பதட்டம் நிலவி வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டுக்குப்பின் இன்றுவரை, ராணுவத்துக்கு எதிராக எவ்வித
தாக்குதலும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்சல் குருவுக்கு
கிடைக்க வேண்டிய சட்ட ரீதியான உரிமைகள் கிடைக்கவில்லை. வழக்கு விசாரணையின்
போது, இவர் கேட்ட வக்கீலை அரசு அமர்த்தித்தர வில்லை. மாறாக அரசுக்கு
இணக்கமான ஒரு வழக்கறிஞரை அமர்த்தினார்கள். இந்த முதல் கோணல்தான் முற்றிலும்
கோணலாகி அவரது உயிர் பறிக்கப்பட்டு விட்டது.
அப்சல் குருவுக்கு முன்னால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட எவரையும் மத்திய அரசு தூக்கில் போடவில்லை. முன்னால் பிரதமர் இராஜீவ் காந்தியை கொன்று குவித்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் இன்றுவரை தூக்கிலிடப்படவில்லை. காலிஸ்தான் பயங்கரவாதியான தேவேந்தர் சிங் புல்லார் தூக்கில் இடப்படவில்லை. அப்சல் குருவுக்கு முன்னால் 90பேரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இவர்களையெல்லாம் தூக்கில் போட்டு விட்டு அப்சல் குருவையும் தூக்கில் போட்டிருந்தால் நிலைமை இந்தளவிற்கு சென்றிருக்காது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, எல்லா கருணை மனுக்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் மக்பூல் பட், அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் மனுக்களை மட்டும் நிராகரித்து "பாரபட்சமாக" நடந்துக்கொண்டதை காஷ்மீர் மக்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மத்திய உள்துறை அமைச்சகமும், சிறைத் துறையும் கொலை குற்றவாளிகளை வரிசைப்படுத்தி தூக்கில் போடாமல், முஸ்லிம்களை மட்டும் "குறி வைத்து" தூக்கில் போட்ட வரலாறை முஸ்லிம்கள் எவரும் மறப்பதற்கில்லை. அப்சல் குருவை ‘திடுதிப்’ என்று தூக்கில் போட்டுவிட்டு, காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு, தொலைபேசி, இன்டர்நெட் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தையும் முடக்கிவிட்டு அப்போதைக்கு பிரச்சினைகளை அமுக்கியது மத்திய அரசு. ஆனால், அப்சல் குரு விவகாரம் நீறு பூத்த நெருப்பாக, காஷ்மீரில் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்: