குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராவதை எப்பாடுபட்டாவது தடுப்பேன்
என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கூறியுள்ளார். பாரதிய
ஜனதா கட்சியைப் பொறுத்தவரை நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது
உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கருத்து
தெரிவித்திருக்கும் லாலு பிரசாத் யாதவ், நாட்டின் பிரதமர் பதவியில் மோடி
உட்காருவதை எப்பாடுபட்டாவது தடுத்து நிறுத்துவேன். 2014-ம் ஆண்டு லோக்சபா
தேர்தலுக்குப் பிறகு நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும்
ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பேன். குஜராத்
மாநிலத்தில் 2002-ம் ஆண்டு இரு இனங்களுக்கு இடையே மோதலை உருவாக்கி பல நூறு
பேரை படுகொலைக்குக் காரணமான இருக்கும் ஒரு நபர் இந்தியா போன்ற மதச்சார்பற்ற
நாட்டின் பிரதமராக முடியும்? நாட்டின் பிரதமராகிவிடுவோம் என்ற நரேந்திர
மோடியின் கனவு ஒருநாளும் பலிக்காது. அவருக்கு இந்தியா முழுவதும் ஆதரவு
எதுவும் இல்லை என்றார் அவர்,

0 கருத்துகள்: