
அமெரிக்கத் தீர்மானம் குறித்து
இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம்
அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு
எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில்
அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் உத்தேசம் கிடையாது என
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி
ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனிவாவிற்கான
அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி எலீன் டோனாஹிடம் அவர் இதனைத்
தெளிவுபடுத்தியுள்ளார்.அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக
நிராகரிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில்
இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் திட்டம் கிடையாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.தீர்மானம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
பக்கச்சார்பான, ஒரு தலைப்பட்சமான தீர்மானங்கள் குறித்து இணக்கப்பாடுகளை
ஏற்படுத்திக் கொள்ளும் திட்டமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புக்களுக்கு அனைத்து
தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும், ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை
இலங்கை அரசாங்கம் ஒருபோதும் நிராகரிப்பதில்லை என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். திறந்த மனதுடன் உலக நாடுகள் இலங்கையுடனான
உறவுகளைப் பேணும் என எதிர்பார்ப்பதாக ரவினாத் ஆரியசிங்க நம்பிக்கை
வெளியிட்டுள்ளார்.
0 கருத்துகள்: