
மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென இலங்கையை, பிரித்தானியா கோரியுள்ளது.
பொதுநலவாய கொள்கைகளான மனித உரிமை
மேம்பாடு மற்றம் நல்லாட்சி போன்றவற்றுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க
வேண்டுமென பிரித்தானிய சிரேஸ்ட அமைச்சர் பரோனெஸ் சயிடா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில்
நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது
குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் எழுப்பப்பட்ட
கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித
உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி
வருவதாகத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: