நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம்களுக்கெதிரான இன ரீதியான செயற்பாடுகள், வன்முறைகள் தொடர்பான தகவல்களைப் பெற்று உடனுக்குடன் உரிய தரப்புக்களுடன் பேசி நடவடிக்கை எடுக்கும் வகையில் Coalition for Justice நீதிக்கான கூட்டு என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் நோக்கங்கள், செயற்பாடுகள் பற்றிய தகவல்களை இந்த நேர்காணல் மூலம் வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

கேள்வி: எவ்வாறான நோக்குடன் இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது?

பதில்: பல்வேறு பெரும்பான்மை அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கெதி ரான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் சிறு அளவில் முன்னெடுக்கப்பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், அபாயா அணியும் பெண்களுக்கெதிரான தாக்குதல்கள் உட்பட இன்னோரன்ன இனவாத செயற்பாடுகள் முன்னெடுக் கப்படுகின்றன.

முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கை கள் திட்டமிட்டு முடக்கப்படுகின்றன. இவ்வாறான மோசமான நிகழ்வுகள் குறித்து பாதிக்கப்படும் முஸ்லிம்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யக்கூட அச்சப்படுகின்றனர். இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவுகளே இல்லாமல் முடங்கியுள்ளன. அச்சம் காரணமாக வெளியில் செல்வதற்குக்கூட அச்சப்படுகின்றார்கள். இதனைக் கருத்திற் கொண்டே இவ்வாறானதொரு அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

கேள்வி: இவ் அமைப்பின் ஆரம்ப அங்கத்துவம் பற்றி…?

பதில்: சட்டத்தரணிகள், புத்திஜீவிகள் பலர் இணைந்து இந்த அமைப்பினை உருவாக்கினோம். எந்தவித சுய நோக்கங்களும் இன்றி சமூக நலன் கருதி அமைப்பில் உள்ள அனைவரும் செய லாற்றி வருகின்றனர்.

கேள்வி: முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறதா?

பதில்: எதிர்பார்த்ததை விடவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமே உள்ளன. அமைப்பின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் பரவலாக முன்னெடுக்கப்படாத நிலையிலும் ஆர்வத்துடன் முறைப்பாடுகளை வழங்கு கின்றனர். பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டிய முறைப்பாடுகள் தொடர்பில் எமது ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்கின்றார்கள்.

கேள்வி: எவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன?

பதில்: பள்ளிகள் மீதான தாக்குதல்கள், பர்தா உடை அணிந்து செல்லும் யுவதிகள் மற்றும் பெண்களின் முறைப்பாடுகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் குறித்து தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.

கேள்வி: உதாரணத்துக்காக ஒன்றை கூறமுடியுமா?

பதில்: ஆம். கொழும்பிலுள்ள பிரதான ஆஸ்பத்திரி யொன்றில் முஸ்லிம் பெண் டாக்டர் ஒருவர் அபாயா அணிந்த நிலை யில் தொலைபேசியில் உரையாடியவாறு ஆஸ்பத்திரியினுள் நடமாடியபோது, பெரும்பான்மை இளைஞனொருவன் அவரை உதைத்தவாறு சென்றுள்ளான். டாக்டர் திரும்பி வேண்டுமென்று தானே என்னை உதைத்துச் சென்றீர்கள் எனக் கேட்டபோது, தகாத வார்த்தைகளைக் கூறிச் சென்றுள்ளார்.

இதுதொடர்பில் குறித்த பெண் வைத்தியர் எமது அவசர தொலைபேசி சேவையோடு அழுதவாறு தொடர்புகொண்டார். ஆஸ்பத்திரி பணிப்பாளரி டம் இதுபற்றி உடனடியாக தெரிவிக்கும்படி நாம் ஆலோசனை வழங்கியதுடன், உரிய தரப்புக்களுக்கு இதுபற்றி தெரிவித்தோம். குறித்த டாக்டர் ஆஸ்பத்திரி பணிப்பாளரிடம் இத் தகவலைத் தெரிவித்ததும் அவர் உடன் செயற்பட்டார். குறித்த முஸ்லிம் பெண் டாக்டரையும் ஏனைய டாக்டர்கள் சிலரையும் பாது காப்பு உத்தியோகத்தர்களையும் அழைத்துக் கொண்டு பணிப்பாளரும் சேர்ந்து குறித்த நபரை ஆஸ்பத்திரி முழுவதும் தேடியுள்ளனர். மருந்துச் சீட்டை வைத்துக் கொண்டு வரிசையில் நின்றுள்ளார். உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் அவரைப் பிடித்து கொஹுவல பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் உடன் செயற்பட்டு விபரீதங் கள் ஏற்படாதவாறு தடுத்துள்ளோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் எவ்வாறு செயற்பட வேண்டும் முறைப்பாடுகளை எவ்வாறு அறிவிப்பது போன்ற பல்வேறு தகவல்களையும் ஆலோசனைகளையும் நாம் வழங்கி வருகின்றோம்.

கேள்வி: சம்பவங்கள் நிகழ்ந்தால் முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்: முஸ்லிம்களுக்கெதிரான சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தால் பொறுமை யோடு நடந்து கொள்ளுங்கள். பொலிஸில் முறைப்பாடு செய்யுங்கள். எமது அமைப்புக்கு உடனடியாக இதுபற்றி அறிவியுங்கள். பொலிஸார் உங்களது முறைப்பாடு தொடர்பில் அசட்டையாகஇருந்தால், நடவடிக்கை எடுக்காவிட் டால் எமக்கு தகவல் தாருங்கள். அசம்பாவிதங்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடின் முஸ்லிம் அமைச்சர்கள் பொலிஸ் உயரதிகாரி கள் உட்பட சகல இடங்களுக்கும் இது பற்றி அறிவிப்போம். அதன் பிறகும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காவிடின் வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

கேள்வி: தகவல்களை எவ்வாறு வழங்க வேண்டும்?

பதில்: எமது அமைப்பின் உடனடி தொலைபேசி இலக்கங்களுக்கு உடனடி யாக தகவல்களை வழங்கலாம். 075 9700910, 075 9700911, 075 9700913 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தகவல்களை எமக்கு வழங்க முடியும்.

கேள்வி: தற்போதுள்ள நிலையில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

பதில்: அசம்பாவிதங்கள், உணர்வூட் டும் சம்பவங்கள் நடைபெறுகையில் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். வன்முறைகளை நாட வேண்டாம். அந்தந்தப் பள்ளிகள், அமைப்புக்கள், புத்தி ஜீவிகளின் ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயலாற்றுங்கள். முடியுமான அளவு சமாதானமாகவும் நல்லெண்ண அடிப்படையிலும் பிரச்சி னைகளுக்கு தீர்வுகாண முயற்சிப்போம். அதன்மூலம் பெரும்பான்மையினருடனான உறவுகளையும் பேணிப்பாது காத்துக் கொள்ள முடியும்.




0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts