இந்த வருடம், சர்வதேச பெண்கள் தினத்திற்கு
முன்னர் (3 மார்ச் 2013), சுவீடனில் ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஒரு நூதனமான
போராட்டம் நடந்தது. சுவீடனில் புலம்பெயர்ந்து வாழும், ஈரானிய இடதுசாரி
பெண்களின் குழு ஒன்று, தமது தாயகத்தின் முகத்திரை சட்டத்தை எதிர்த்து
ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஈரானில், தெருவில் ஹிஜாப் அணிந்து செல்லாத
பெண்ணுக்கு தண்டனையாக 74 கசையடிகள் வழங்கப் படும். ஹிஜாப் சட்டத்தை
எதிர்க்கும் முகமாக, ஸ்டொக்ஹோல்ம் நகரில் ஒன்று கூடிய ஈரானிய பெண்கள்,
நிர்வாணப் போராட்டம் நடத்தினார்கள். My nudity is my protest”, “No to
hijab” போன்ற வாசகங்கள், அவர்களது மார்பிலும், முதுகிலும் எழுதப்
பட்டிருந்தன. "ஹிஜாப் எனது தெரிவு அல்ல! ஈரானிய இஸ்லாமிய குடியரசு ஒழிக!"
போன்ற கோஷங்கள் எழுப்பப் பட்டன.
இந்தப் போராட்டத்தை, ஈரானிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களும், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் அமைப்பினரும் இணைத்து ஒழுங்கு படுத்தி இருந்தனர். சுவீடிஷ் ஊடகங்கள் கூட, ஈரானிய பெண்களின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. நிர்வாணப் போராட்டம் நடத்தி உலகப் புகழ் பெற்ற, உக்ரைன் நாட்டை சேர்ந்த FEMEN அமைப்பினரின் இணையத்தளத்தில் மட்டுமே அந்த நிகழ்வு சம்பந்தமான போட்டோக்கள் பிரசுரிக்கப் பட்டிருந்தன.

0 கருத்துகள்: