பொதுபலசேனாவில் உள்ளவர்கள் யார்? அவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அவர்கள் கூறுவதை நாம் ஏற்கமுடியாது என்று தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்கப்பாட்டுக்குமானஅமைச்சர்
வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நாட்டின் சட்டத்துக்கு எதிராக
பொதுபலசேனா செயற்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
எனத் தெரிவித்த அவர், முஸ்லிம்கள் மட்டும் ஹலால் உணவுகளைக் கொள்வனவு
செய்வதற்கான பொறிமுறையொன்றையும் உருவாக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
உதயன் பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுபலசேனா அமைப்புப் பற்றி அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
“பொதுபலசேனா அமைப்பிலுள்ளவர்கள் யார்? அவர்கள் பௌத்த சமயத் தலைவர்கள் அல்லர். அத்துடன், அவர்கள் கூறுவதை நாம் ஏற்கவும் முடியாது. அதைக் கேட்டு சிங்கள மக்கள் ஏமாறவும் மாட்டார்கள். பொதுபலசேனா அமைப்பினரால் நாட்டிலுள்ள சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது. ஆனால், அவர்களது செயற்பாடுகள் நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களுக்கே பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றன. எனவே, இதற்கு ஒரு முடிவுகட்டவேண்டும்.
முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆராய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது. இதன்படி ஹலால் பிரச்சினைக்கும் சுமுகமான தீர்வொன்று எட்டப்படும்.
நாட்டிலுள்ள சிங்கள, தமிழ் மக்கள் ஹலால் உணவுகளை நிராகரித்தாலும், முஸ்லிம் மக்கள் ஹலால் உணவுகளை உண்பதற்குத் தேவையான பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும். பொதுபலசேனா அமைப்பினர் நாட்டின் சட்டத்துக்கு எதிராகச் செயற்படுவாராயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

0 கருத்துகள்: