சவூதி அரேபியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு ஆயுதமேந்திய 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் போலீசில் சிக்கியது. நகைக்கடைகளில் திருடியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அவர்களுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
செவ்வாயன்று ஐ.நா வல்லுனர்கள் பலர்...
தனிப்பட்ட முறையில் இந்தத் தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். இந்தத் தீர்ப்பு நியாயமற்ற விசாரணையின் முடிவில் வழங்கப்பட்ட ஒன்றாகும் என்றும் கூறினர்.
அதிலும் தண்டனை பெற்ற 2 பேர் கைது செய்யப்பட்டபோது சிறுவர்களாக இருந்தனர் என்று கூறப்பட்டது. இதனால் தண்டனை நிறைவேற்றுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஐ.நா. வல்லுநர்கள் கருத்து தெரிவித்த போதிலும், ஐ.நா வுக்கு அல்வா கொடுத்துவிட்டு இந்தக் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
வழக்கமாகக் குற்றவாளிகளின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படும். ஆனால் அபா சதுக்கத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தங்கள் நாட்டு நீதித்துறையில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என கடந்த மாதம் சவூதி அரேபிய உள்துறை மந்திரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்: