பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் அரசாங்கத்தினுள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க உறுப்பினர்களிடையே இந்த அமைப்பு குறித்து வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
ஏற்கனவே பொதுபல சேனா அமைப்பு நாட்டின் பொலிஸ் படையாக செயற்பட முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் தினேஸ் குணவர்தன, நாட்டின் சட்டத்தை எந்த அமைப்பும் கைகளில் எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமது மதத்தை பாதுகாக்கும் போர்வையில், பொதுபல சேனா அமைப்பு சட்டத்தை கையில்எடுத்து செயற்படுவதை அனுமதிக்க முடியாது.
இந்த நிலையில் அமைச்சரவை உபகுழு உடனடியாக ஒன்று கூடி இந்த விடயத்தை ஆராய்ச்சிக்கு உட்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பொதுபல சேனாவின் அலுவலகம் ஒன்றை அண்மையில் இலங்கை அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: