இலங்கையில் முஸ்லிம்களை நசுக்க திட்டமிட்டு ஏவப்பட்டு, பின்னர் ‘ஹலால்’ என்பதுடன் தொடரர்புபடுத்தி, இன்று இலங்கை முஸ்லிம்களின் உரிமையை சூரையாடுவதில் புகழ்பெற்று வரும் ‘பொது பல சேனா’ வின் திட்டங்களுக்கு எங்கள் உரிமைகள் இன்று விற்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவில் ஓர் சினிமாவுக்கு போராடி நீதிமன்றம் சென்று அதில் ஓர் இலட்சியத்தையும் அடைந்திருந்தன முஸ்லிம் அமைப்புக்கள். இவற்றுள் அரசியல் ஆக்கிரமிப்புக்கள் இருந்ததாக தகவல்கள் வெளிவந்தாலும், விஸ்வரூபம் முழுமையடையாமல் பாதியில் வெளிவந்தது.
இலங்கையில் விஸ்வரூபத்துக்கு எதிராகக் குரல்கொடுத்த இஸ்லாமிய இயக்கங்கள் கூட, இலங்கையில் எமது உரிமைகள் தட்டிப்பறிக்கப்படுவதை தண்டிக்கவோ கண்டிக்கவோ முடியாமல் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.
இந்நாட்டில் பிறந்த குடிமகனுக்கு உரிய உரிமைகள், அவன் பின்பற்றும் சமயம், கலாச்சாரம் என்பவற்றிற்கான உரிமைகளை வழங்குவது அரசுக்குரிய கட்டாயக் கடமையாக இருக்கின்றது. அவற்றை பெற்றுக் கொள்வது அல்லது உரியவர்கள் பெற்றுக் கொடுப்பது ‘வாஜிப்’ ஆக இருக்கின்றது.
இவ்வாறு வழங்கப்பட்ட, பல நூற்றாண்டுகள் பின்பற்றி வந்த ஓர் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து ஏன் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவில்லை? நீதியமைச்சராக ஓர் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதி இருக்கையில், ஓர் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஓர் கட்சியின் அங்கத்தவராக இருந்தும் நீதிமன்றம் சென்று நியாயம் பெறாமல், பௌத்த மதகுருமாரின் வேண்டுகோளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது முடிவை கடந்த திங்கட் கிழமை அறிவித்திருந்தது.
இவற்றுள் ஹலால் இலட்சனை இலங்கையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு இனிமேல் இருக்காது எனவும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் இலட்சனை பொறிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.
ஹலால் என்பது முஸ்லிம்களுக்குரிய உரிமைகளில் ஒன்றானதாகும். இவற்றை பிற மத, சமூக நலனுக்காக விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்பட்டாலும், இவ்வறிக்கையை அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவுக்கு எழுதிக்கொடுத்தது யார் என்ற கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளன.
இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு ஹலால் இல்லை! வெளிநாட்டினருக்கு ஹலாலா? கேவலம் பழத்தை விற்று சக்கையை நாங்கள் உண்ணும் ஓர் துர்ப்பாக்கிய நிலைமைக்கு இத்தகைய சட்டத்தை மாற்றியமைத்தது யார் என்ற கேள்வி எழுந்திருக்கின்றன.
இலங்கையின் முஸ்லிம் அமைச்சர்களில் ஒருவர்கூட எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் இருந்த ஹலால் எதிர்ப்பு தொடர்பான பிரச்சினைக்கு, எப்படியாவது ஓர் முடிவைப் பெற்றுக்கொடுப்போம் என்ற நன்நோக்கில் அ.இ.ஜ.உ செயல்பட்டுள்ளதா எனவும் சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன.
இலங்கை முஸ்லிம்களுக்கு ஹலால் இல்லை. முஸ்லிம்களுக்கான அபாயகரமான சூழ்ச்சிகள் கண் முன்னால் இலங்கையில் இடம்பெற்று வருகையில், இலங்கையில் முஸ்லிம்களுக்கு ஒன்றுமே இல்லை! அவர்கள் எவ்வித அச்சமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர் என்பதையும், ஹலால் இன்னும் இலங்கையில் பேணப்படுவதை குறிப்பாக அரபு உலகுக்கு எடுத்துக்காட்டும் ஓர் தந்திரோபாய நாடகத்தில் முஸ்லிம் தலைமை வீழ்ந்திருக்கின்றது என்பது மட்டும் நிச்சயம்.
ஹலால் எதிர்ப்பில் நாங்கள் விட்டுக்கொடுப்புக்கு வந்தால், அவற்றை முற்றாக விட்டுக்கொடுத்து இதன் காரணமாக அரசாங்கமும் பேரினவாக உணவு நிறுவனங்களும் ஹலால் என்பதை உணர்வதற்கு ஓர் சந்தர்ப்பத்தை வழங்கி இருக்க வேண்டும்.
எனினும் பாதி ஹலால்-பாதி ஹராம் என்ற ரீதியில் இனிமேல் இலங்கை முஸ்லிம்கள் உணவுப் பண்டங்களைக் கொள்வனவு செய்யும் அபாயம் காத்திருக்கின்றன.
இதுவரை அரச, தனியார் வானொலிகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வந்த உணவு பண்டங்களின் விளம்பரங்களின் இறுதியில், ஹலால் என்பதை நிரூபித்து வந்தனர். ஆனால் இப்போது அநேகமான விளம்பரங்களில் இத்தகைய ஹலால் உறுதிப்படுத்தலை நீக்கி விட்டனர்.
ஆனால் முஸ்லிம்களால் ஆர்வத்துடன் கொள்வனவு செய்யப்பட்டு வந்த இத்தகைய உணவுப் பண்டங்களை இனிமேல் எத்தனைபேர் கொள்வனவு செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வர் என்பதும் அடுத்த கேள்வி!
ஹலால் இலட்சனை இலங்கையில் சுமார் கடந்த 10 வருடங்களாகவே உணவுப் பொருட்களில் பொறிக்கப்பட்டு வருவது எனவும், இதற்கு முன்னர் மக்கள் ஹலால் இலட்சனை பொறிக்கப்படாத பண்டங்களையே ஹலால் என அணுகூலமாக எடுத்துக்கொண்டனர் எனவும் இன்று பல இஸ்லாமிய அமைப்புக்கள் கூறிவருகின்றன. நியாயப்படுத்த முயற்சிக்கின்றன!
இவர்கள் கூறுவது சரியென்றால், ஏன் நாங்கள் பொது பல சேனா அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும்?, ஏன் பத்திரிகை மாநாடுகளைக் கூட்டி அறிவிக்க வேண்டும்? ஏன் இவ்வளவு காலமும் இழுத்தடித்து, இன்று பாதியில் இப்பிரச்சினையை கைவிட்டு வந்தது? போன்ற கேள்விகள் எழுகின்றன.
ஏனெனில் அ.இ.ஜ.உ. ஹலால் தொடர்பில் தனது தீர்மானத்தை தெரிவித்து 24 மணிநேரங்கள் முடிவடைவதற்கு முன்னரே, ‘ஹலால் விடயம் இலங்கையில் முற்றுப்பெறவில்லை’ என்பதாக பொது பல சேனா உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறது.
பொது பல சேனாவின் நோக்கம் இலங்கை முஸ்லிம்களே தவிர வேறு எந்த நோக்கமும் அவர்களுக்குக் கிடையாது. ‘கிறிஸ்’ மனிதர்களை ஏவிவிட்டு முஸ்லிம் பெண்களின் மார்பங்களைக் கடித்துக் குதறுவதற்கு அனுப்பியவர்களின் நோக்கம் அன்று எடுபடாததால், எவரும் கைவைக்க முடியாத காவி உடைக் காரர்களை இன்று முஸ்லிம்கள் மீது ஏவி அதன்பின்னால் அமெரிக்க, இஸ்ரேல் நட்பில் குளிர் காய்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.
எனவே விட்டுக் கொடுப்பதே இஸ்லாம்! அதற்காக நிபந்தனைகளை வைக்காமல் பாதி பாதியாக விட்டுக்கொடுக்காமல் இருப்பதை காத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில் இது தனிநபரின் பிரச்சினையல்ல மௌனித்து விட்டுக் கொடுப்பதற்கு!

0 கருத்துகள்: