இன்றைய நாள் வரலாற்றில் எழுதப்படவேண்டியதொன்று ஏனெனில் ஹலால்
தொடர்பான தீர்மானமானது இலங்கையர் என்ற வகையில் நம் எல்லோருக்கும் கிடைத்த
வெற்றியென பெல்லன் வெல விமலரத்ன தேரர் தெரிவித்தார்.
இலங்கை வர்த்தக சம்மேளனம், பௌத்த பிக்குமார்கள் மற்றும் அகில இலங்கை ஜம்
இய்யத்துல் உலமா ஆகியன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே பெல்லன் வெல விமலரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஹலால் விவகாரம் தொடர்பில் இன்று முஸ்லிம் மக்கள் சார்பாக அகில இலங்கை
ஜம் இய்யத்துல் உலமா நாட்டின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொண்ட தீர்மானத்தை
நாம் வரவேற்கின்றோம். சந்தேசமடைகின்றோம். இது நம் எல்லோருக்கும் கிடைத்த
வெற்றியாகும்.
இதேவேளை, இது ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு பிற மதங்களுக்குரிய
மரியாதைகள் கொடுக்கப்படுகின்றன. மதங்களுக்கிடையில் இவ்வாறான பிரச்சினைகள்
எழும்போது நாம் மதத் தலைவர்களுடன் கலந்துபேசி அதனை அறிவுபூர்வமாக தீர்க்க
முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: