புத்த பெருமான் குரோதத்தின் மூலம்
குரோதத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என போதித்திருந்தும், சில சேனாக்கள்
வாள், தடி போன்றவற்றைத் தூக்கிக் கொண்டு போருக்கு ஆயத்தமாகியுள்ளன என
சுதந்திர கூட்டமைப்பின் தென்மாகாண சபை உறுப்பினரான பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.
சகல நடவடிக்கைகளுக்கும் மாற்று
நடவடிக்கைகள் உள்ளன, இவ்வாறான கொடிய செயற்பாடுகளால் கணக்கிடமுடியாத
பெரும் பிரச்சினை தோன்றலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார் .
பௌத்த மதத்திற்காக எழுந்து நிற்கிறோம் எனக்
கூக்குரலிடும் சில இயக்கங்கள் புத்த பெருமானை விடவும் பெரியவர்களாக மாறி –
அவரது செயற்பாடுகளையும் மீறி இவ்வாறான தீய நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருப்பதாகவும் பௌத்த தர்மத்தை கட்டிக் காக்கும் எண்ணம்
அவர்களிடம் காணப்படுவதில்லை எனவும் இதனால் கடைசியில் மதவாத அல்லது இனவாத
பெரும் பிளவு ஏற்பட்டு அரசாங்கமும் கவலைப்பட வேண்டிவரும் எனவும்
தெரிவித்துள்ளார் .
இந்த கைகலப்புக்களின் இறுதியில்
புண்படப்படப் போவது அரசாங்கமே! பின்னர் அரசாங்கம் எவ்வாறு அந்த வலியைப்
பொறுத்துக்கொள்ளும் என்பது தனக்கும் பிரச்சினையே என்றும்
குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: