
இலங்கை விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்யப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
தேவையற்ற வகையில் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என இந்திய வெளவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மட்டுமன்றி வேறும் நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கும் எனவும், பிரச்சினைகளை கண்டு அஞ்சாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்: