நடுக்கடலில்
தத்தளித்துக் கொண்டிருந்த மியான்மரைச் சேர்ந்த 108 பேரை இந்தியக் கடலோரக்
காவல் படையினர் வெள்ளிக்கிழமை அதிகாலை மீட்டனர்.
மியான்மரிலிருந்து மும்பைக்கு சட்டத்துக்குப் புறம்பாக பலர் வருவதாக
மும்பையைச் சேர்ந்தவர் அளித்த தகவலின் அடிப்படையில் மீட்புப் பணி
மேற்கொள்ளப்பட்டதாக அந்தமான் மற்றும் நிகோபர் கடலோரக் காவல்படை கமாண்டன்ட்
எஸ்.எஸ்.என் பாஜ்பாய் தெரிவித்தார். இவர்கள், கடந்த மாதம் 15-ம் தேதி முதல்
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். மீட்கப்பட்டபோது குடிநீர் மற்றும்
உணவின்றி மிகவும் சோர்வாகக் காணப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு
உணவு, குடிநீர் மற்றும் முதலுதவி வழங்கப்பட்டது.
0 கருத்துகள்: