பங்களாதேஷில்
இஸ்லாமிய தலைவர்களை துன்புறுத்துவது கண்டிக்கத்தக்கது என்று புனித
மஸ்ஜிதுல் ஹராமின் இமாம் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவரான மவ்லானா தில்வார் ஹுஸைன் ஸஈதியை எனக்கு
நேரடியாக தெரியும். கஃபாவில் நுழையவும், பிரார்த்தனை புரியவும் பாக்கியம்
பெற்றவர் ஸஈதி. அவர் பங்களாதேஷிற்கு மட்டும் இஸ்லாமிய மார்க்க அறிஞர் அல்ல.
உலகின் பிரபலமான மனிதர்.
போர்க் குற்றம் சாட்டி மவ்லானா முதிவுர்
ரஹ்மான் நிஸாமி உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களை சிறையில் அடைத்திருப்பது
கண்டிக்கத்தக்கது. திருக்குர்ஆனின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்ததே
இவர்கள் செய்த குற்றம் என்பது அனைவருக்கும் தெரியும் என்று மக்கா இமாம்
அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
0 கருத்துகள்: