மதுரையில்
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில், மஹிந்த
ராஜபக்ஸவுக்கு சொந்தமான விமான நிறுவனமான மிஹின் லங்காவின் அலுவலகத்தை நாம்
தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் போன்றவற்றைத் தொடர்ந்து நேற்று சுப்ரமணியசுவாமி அலுவலகம் தாக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலையில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள்
திடீரென ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ரயில் நிலையம் நோக்கி
முன்னேறிய அவர்களை போலீசார் கைது செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு
வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கை விமான நிறுவனமான ‘மிகின்
லங்கா’ நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங் ஆபீஸை நாம் தமிழர் கட்சியை
சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 7ம்
தேதி முதல் மதுரையில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை, மகின்
லங்கா நிறுவனம் தொடங்கியது. இந்த நிறுவனத்தின் டிக்கெட் புக்கிங் ஆபீஸ்,
மதுரை காளவாசல் பகுதியில் அமைந்துள்ளது. இன்று காலையில் நாம் தமிழர்
கட்சியைச் சேர்ந்த 30 பேர் திடீரென இந்த அலுவலகத்தை அடித்து
நொறுக்கினார்கள். கண்ணாடிக் கதவு, கம்ப்யூட்டர், பிரிண்டர், டேபிள்
உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.
அதைத் தொடர்ந்து காளவாசல் சிக்னல்
அருகே சாலை மறியலும் நடந்தது. மறியலின் போது பஸ்கள் மீது சிலர் கற்களை
வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுவதற்காக
அறிகுறிகள் தெரிவதால் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: