ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டும்என ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்

அண்மைக்காலமாக நடைபெற்று வரும் சர்ச்சைக்குரிய ஹலால் விடயங்கள் எமது நாட்டின் வர்த்தகத்திலும் வருமானத்திலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி நாட்டின் வருமான மூலங்களில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் அவை தீர்த்து வைக்கப்படல் வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; பிரதித் தலைவர் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

ஹலால் விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு குடாநாடுகள் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் காலாகாலமாக இலங்கை உறவுகளை நல்ல முறையில் பேணி வருகின்றது. 50க்கு மேற்பட்ட முஸ்லிம் நாடுகளுடன் நாம் நூற்றாண்டு காலமாக பேணிப் பாதுகாத்து வருகின்ற இனிய உறவுகள் ஒரு மிகச் சிறிய குழுவினால் சீர்குலைக்கப்படக் கூடியதாக உள்ளது.

அதிகாரத்தில் உள்ளவர்கள் இவ்விடயத்தில் திறந்த மனதுடன் செயற்;பட்டு எமது வர்த்தகத்திற்கு பங்கம் விளைவிக்;காமல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.எமது உள்ளுர் வர்த்தகர் ஒருவர் தமது உற்பத்திப் பொருளான சவர்க்காரத்தின் ஹலால் சான்றுதல் பெறுவதற்கு ஒரு குழு அனுமதிக்காததால் தான் 15 மில்லியன் ரூபா நஷ்டத்தை அடைந்ததாகக் கூறி வேதனைப்பட்டார்.

எமது வர்த்தகம் ஒரு சில பொருட்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த காலம் மலையேறிப்போய் விட்டதாக அமைச்சர் கருதுகிறார் நுகர்வோரின் அதிகரித்த தன்மை காரணமாக பாரம்பரியமற்ற பொருட்களான பிஸ்கட், சவர்க்காரம், நூடில்ஸ், சொக்லட் மற்றும் ஏனைய பொருட்கள்; முஸ்லிம் நாடுகளுக்கும் மற்றும் முஸ்லிம்கள் வாழும் மேற்கத்தைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

எமது வர்த்தகத்தை வெளிநாடுகளுக்கு விரிவாக்குவது என்பதையே புதிய சகாப்தம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; பிரதித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார். உலகின் பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும் 1.5 பில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் எமது பொருட்களை வாங்கி தங்களது உணவுகளில் மார்க்க முறைமைகளை அவர்கள் பேணுவதற்கு நாம் கடமைப்பாடு உள்ளவர்களாக உள்ளோம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்குமாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் றபியூதர் என்ற பதவி நிலையில் இருக்கும் ஒருவர் தமது நாடான இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் நுகர்வோர் பொருட்களில் “கொஷர்” என்ற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்துவதற்கென்றே நிரந்தரமாக இங்கே இருக்கின்றார். “கொஷர்” என்பது அறபு மொழியில் ஹலால் என்று பொருள்படும்.

மேலும் நசீர் அஹமட் சார்க் பிராந்தியத்தில் மட்டும் 300 மில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள்; வாழ்வதாகவும் எனவே இவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவது விவேக மற்ற செயல் என்றும்; அவர்கள் எமது கிரிக்கெட் வீரர்களின் அபிமானிகள் என்பதால் எமது நாட்டை அவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் வலியுறுத்தினார்.

எனது நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பிரயாணிகளில் 30; வீதமானோர் முஸ்லிம்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்றும் அவர்களில் சிலர் தமது பாரம்பரிய இஸ்லாமிய உடையையே அணிபவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹலால்: பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தமுன் தீர்த்து வைக்கப்படல் வேண்டும்

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய

Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts