வாடிகனின் போப் 16ஆம் பெனடிக்ட் அண்மையில் தனது பதவியிலிருந்து விலகினார். முதுமையும் நோயும்தான் காரணம் என்று அறிவித்தார். கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து தாமாக விலகிய முதலாவது போப் இவர்தான். இது கத்தோலிக்க வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

உண்மையில் வயோதிகம்தான் காரணமா? 
இவரைவிடக் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது யோவான் பவுல் பதவியிலிருந்து விலகவில்லையே! சஊதி ஆய்வாளர் ஒருவர் இது குறித்து ஆய்வு செய்து அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவர் மதங்கள் ஒப்பீட்டியல் மற்றும் வாடிகன் விவகாரங்களின் சிறப்பு ஆய்வாளர் என்பது குறிப்பிடத் தக்கது.
இஸாம் முதீர் எனும் அந்த ஆய்வாளர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவல்களாவன:
புராதன பைபிள் ஒன்று கிடைத்திருக்கும் இரகசியம் வெளியுலகிற்குக் கசிந்ததே உண்மையான காரணம். அதில் இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றிய முன்னறிவிப்பு இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த மூவர் இஸ்லாத்தை ஏற்றது மட்டுமன்றி, அதை வெளிப்படுத்தாமல் வாடிகனிலேயே தற்போது இருந்துவருகின்றனர். போப் அம்மூவரைப் பற்றி அறிய விரும்புகிறார். அவர்களில் ஒருவர்தான் தகவல் கசியக் காரணமாக இருக்க முடியும் என்று கருதுகிறார்.
இஸ்லாத்தைத் தழுவிய மற்றொருவர் தென்னாப்பிரிகா சென்றுவிட்டார். அங்கு அஹ்மத் தீதாத் அவர்களின் ஊரில் வைத்து, தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்தார். இவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு தீதாத் அவர்களே காரணமாம்!
வாடிகன் பொறுப்பாளர்களுடன் இந்த விஷயம் தொடர்பாக நேருக்குநேர் விவாதிக்கத் தாம் தயார் என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார். அவ்வாறே, வாடிகனின் பெரிய மனிதர்களில் 35 ஆயர்களும் பாதிரிகளும் இஸ்லாத்தை ஏற்றபின்பும் உயிருக்குப் பயந்து அதை மறைத்துவைத்தனர் என்பதையும் பிறகு வாடிகன் பொறுப்பிலிருந்து விலகினர் அல்லது விலக்கப்பட்டனர் என்பதையும் வாடிகனால் மறுக்க முடியுமா? என்றும் இஸாம் சவால் விடுத்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக போப்பும் ஆயர்களும் இந்த விஷயத்தில் மௌனம் சாதித்துவந்தனர். இச்செய்தியை மறுக்க வாடிகனால் இன்றுவரை இயலவில்லை. இறுதியாக போப் பெனடிக்ட் ராஜினாமா செய்தார்.
2006ஆம் ஆண்டில் போப் வெளியிட்ட அறிக்கைகளில் இஸ்லாத்தையும் இறைத்தூதரையும் கொச்சைப்படுத்திப் பேசிப்பார்த்தார். இதன்மூலம் விஷயத்தை மறைத்துவிடலாம் என்பது அவரது எண்ணம். ஆனால், சூனியம் சூனியக்காரனுக்கெதிராகவே திரும்பிவிட்டது; பதவி விலகிவிட்டார்.
வாடிகனின் உளவுத் துறையினர், அந்த பைபிள் பிரதி யார் கையில் உள்ளது என்பதை வலைபோட்டுத் தேடிவருகின்றனர். உண்மை என்னவென்றால், அதைப் பாதுகாக்கத் தவறியவர் போப்தான்; அதைத் தொலைத்த குற்றத்திற்காகவே இப்போது பதவியைத் தொலைத்திருக்கிறார்.
பிரிட்டன் போன்ற பல நாடுகள், போப் தங்கள் நாட்டுக்கு வந்தால் உடனே கைது செய்யத் தயாராயிருந்தன; கைதுக்கான குறிப்புகள் வெளிவந்தது உண்மை என உறுதிப்படுத்தினார் இஸாம். போப்புடைய ஆயர்கள் பலர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதை போப் பிரயாசப்பட்டு மறைத்தார் என்பதே அந்நாடுகளின் குற்றச்சாட்டுகளாகும்.
இஸ்லாமியப் பிரசாரத்திற்கு முன்னால் இவர்களின் தோல்விகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாவதும் வரவிருக்கும் போப்பிற்குப் பெரிய சவால்களாக இருக்கும். (அல்முஜ்தமா)
 

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts