பாலியல்
புகார் அளிக்க வந்த பெண்ணை அடித்து உதைத்த காவல்துறையினர்!டர்ன் டரன் :
டிரைவர் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெண்ணை
நடுரோட்டில் வைத்து பஞ்சாப் காவல்துறையினர் அடித்து உதைத்த வீடியோ பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு தம் தந்தையுடன் சென்று விட்டு திரும்பிய
பெண்ணுக்கு வேன் ஓட்டுனர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தம் தந்தையிடம்
தெரிவிக்கவே, பெண்ணின் தந்தை உள்ளிட்ட சிலர் அந்த ஓட்டுனரை அடித்துள்ளனர்.
அப்போது சாலையோரத்தில் பாதுகாப்புப் பணியில் நின்று கொண்டு இருந்த
காவல்துறையினரிடம் இரு தரப்பும் புகார் தெரிவித்துள்ளது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=zNorNR-bg_A
இருப்பினும் காவல்துறையினர் ஓட்டுனரிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு
புகார் அளித்த பெண்ணைத் தங்களிடம் இருந்த லத்தியாலும், தங்கள் கைகளினாலும்
அடித்து உதைத்த காட்சிகள் முழுவதையும் ரோட்டில் சென்ற ஒருவர் மொபைலில் படம்
எடுத்து வெளியிட்டுள்ளார்.
பெண்ணை தாக்கிய வீடியோ காட்சிகள்
வெளியானதால் தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் இருவரும் பணியிடை நீக்கம்
செய்யப்பட்டுள்ளனர். "பெண்ணைத் தாக்கிய இரு காவல்துறை அதிகாரிகள் மீதும்
தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுக்பீர்
சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்: